Shadow

Tag: Ramya subramaniyan

ரசவாதி விமர்சனம்

ரசவாதி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
குற்றப்பின்னணியுடன் அறிமுகமாகும் ஒரு காவல்துறை அதிகாரி. சித்த மருத்துவம் செய்து கொண்டு, இயற்கை ஆர்வலராக அமைதியான முறையில் வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கும் ஒரு சித்த வைத்தியர். இந்த சித்த வைத்தியர் மீதும், அவருக்கு இருக்கும் காதல் மற்றும் காதலி மீதும் இந்தக் காவல்துறை அதிகாரிக்கு தீராத வன்மம். வன்மம் ஏன், வன்மத்தால் விளைந்தது என்ன என்பதே இந்த ரசவாதி திரைப்படத்தின் கதை. மெளனகுரு, மகாமுனி திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சாந்தகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.  சித்தவைத்தியர் சதாசிவ பாண்டியனாக அர்ஜூன் தாஸ் நடித்துள்ளார். ஒரு காலை சற்று தாங்கித் தாங்கி நடந்து கொண்டு, யானை போன்ற வனவிலங்குகளின் காலில் உடைந்த மதுபாட்டில்கள் காயத்தை ஏற்படுத்திவிடும் என்கின்ற அக்கறையுடன் அவற்றை அப்புறப்படுத்தும் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். சந்திராவாக நடித்திருக்கும் ரேஷ்மா வெங்கடேஷிற்க...