Shadow

Tag: Ratsasan movie

ராட்சசன் விமர்சனம்

ராட்சசன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொலை என்று பதற்றத்துடன் கடந்து விட முடியாத அளவுக்கு, மிகக் கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டு பள்ளி மாணவிகள் ஒவ்வொருவராகக் கொலை செய்யப்படுகின்றனர். குலை நடுங்க வைக்கும் கொலைகள் அவை. புராணங்களில், வரும் ராட்சஷர்கள் யாரும் சைக்கோக்கள் கிடையாது. இதில் வரும் சைக்கோவைச் சித்தரிக்க, ராட்சசன் எனும் சொல் சரியயானதுதானா என்பது ஐயமே! சைக்கோவை எஸ்.ஐ. அருண் எவ்வாறு பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. த்ரில்லர் ரசிகர்களுக்குச் செமயான விருந்தளிக்கும் படம். ஆனால் அதே அளவு நடுக்கத்தையும் தருமளவு மிக இன்டன்ஸாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தளவுக்கு ஒரு படம் எடுக்கப்பட வேண்டியது அவசியம்தானா எனக் கேள்வியெழுமளவு மெனக்கெட்டுள்ளார் முண்டாசுப்பட்டி படத்தின் இயக்குநர் ராம் குமார். ஸ்பைடர் படத்திலும் இப்படிக் காட்சிகள் வரும். ஆனால், கவரில் சுற்றப்பட்டுப் பிடுங்கப்பட்ட பள்ளி மாணவியின் கண் குழிக்குள் இருந்து பூச்சிக...