
ரிங் ரிங் விமர்சனம்
சிவாவின் பிறந்தநாள் விழாவிற்கு, அவனது நண்பர்களான தியாகு, கதிர், அர்ஜுன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தியாகுவும், கதிரும் அவர்களது மனைவியுடன் கலந்து கொள்ள, அர்ஜுன் மட்டும் தனியாகக் கலந்து கொள்கிறான். அனைவரையும் வரவேற்கிறாள் சிவாவின் மனைவி பூஜா வரவேற்கிறாள். அனைவரும் ஒன்றாக அமர்ந்து இரவுணவு அருந்தும்போது, கைபேசியில் யார் ரகசியத்தைப் பாதுகாக்கின்றனர் என்ற விவாதம் விளையாட்டாய் நடக்கிறது. அதன் முடிவாக, யாருக்கு எந்தச் செய்தி வந்தாலும் அதை மற்றவர்களுக்குக் காட்டவேண்டும், அழைப்பு வந்தால் அதை லவுட்-ஸ்பீக்கரில் போட்டுப் பேசவேண்டுமென முடிவெடுக்கின்றனர். விளையாட்டு மெல்ல சூடுபிடித்து விபரீதமாவதுதான் படத்தின் கதை.ரஞ்சனியுடன் லிவிங்-டுகெதரில் வாழும் கதிர் எனும் பாத்திரத்தில் டேனியல் ஆன்னி போப் நடித்துள்ளார். ரஞ்சனியாக ஜமுனா நடித்துள்ளார். தன்னைத் தானே நகைச்சுவையாளனாக நினைத்து ஏமாற்றிக் கொள்ளும் அர்...