ரிப்பப்பரி விமர்சனம்
RIP Up Bury எனும் ஆங்கிலச் சொற்களைத் தலைப்பாக்கியுள்ளனர்.
சமையல் சேனல் வைத்திருக்கும் யூட்யூபர் சத்யராஜிற்கு, நண்பர்கள் இருவருடன் ஊர் சுற்றி வருவதைப் பிரதானமாகக் கொண்டுள்ளார். அவரது வீடியோவில் கமென்ட் போடும் கோல்டன் ஃபிஷ் எனும் பெண்ணைக் காதலிக்கத் தொடங்குகிறார் சத்யராஜ். அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்து காதலில் வெற்றி பெறலாம் எனப் பார்த்தால், மாற்று ஜாதியில் காதலிக்கும் ஆண்களின் கழுத்தை அறுக்கும் சாதிவெறி பிடித்த பேய் ஒன்று அச்சுறுத்தலாக முளைக்கிறது. சத்யராஜ், அந்த சாதிவெறி பிடித்த சைக்கோ பேயை மீறிக் காதலில் வென்றாரா இல்லையா என்பதே படத்தின் கதை.
படத்தின் தொடக்கமே மிரட்டலாக உள்ளது. ஊரை விட்டுக் காதலியுடன் ஓடத் துடிக்கும் காதலனின் தலையைக் கொய்து போஸ்ட் பாக்ஸில் போடுகிறது பேய். பால் கேனுக்குள், டூ-வீலர் பெட்ரோல் டேன்க்கில் எனக் கொல்பவர்களின் தலையைச் சாத்தியமே இல்லாத இடத்தில் எல்லாம் வைத்துவி...