Shadow

Tag: Rocketry – Nambi effect

ராக்கெட்ரி: நம்பி விளைவு விமர்சனம்

ராக்கெட்ரி: நம்பி விளைவு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நம்பி நாராயணனுடைய வரலாற்றுப் படம் (Biopic) எடுக்கிறார்கள் எனும்போதே எனக்கு இயல்பாக ஆர்வம் எழுந்தது. 90களின் சமயத்தில்தான், இந்திய பத்திரிகைத் துறையில் இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம் மையம் கொண்டிருந்தது. இப்படியெல்லாம் நடப்புலகின் புதிரான சம்பவங்களை அம்பலப்படுத்துவது அல்லவா பத்திரிகை தர்மம் என்று மிகவும் உணர்ச்சி மேலீட்டோடு கவனித்து வந்த பல வழக்குகளில் ஒன்று நம்பி நாராயணன் வழக்கு. பிறகு அவர் ஜாமீனில் வெளிவந்தது, அவர் மேலான குற்றசாட்டுகள் நிரூபணம் ஆகாமல் சிபிஐ கோர்ட்டில் வழக்கு தள்ளுபடி ஆனதெல்லாம் நடந்ததும், பத்திரிகைகள் அவர் மேல் கவிந்த வெளிச்சத்தை விலக்கிக் கொண்டுவிட்டன. பத்திரிகைகளால் அதிகம் கண்டுகொள்ளப்படாத அந்தக் காலகட்டத்திலும், நம்பி நாராயணன் தன் மீது அபாண்டமாகப் போடப்பட்ட தேசத்துரோக களங்கத்தைப் போக்கிக் கொள்ள தொடர்ந்து சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டு வந்திருக்கிறார். உச்சநீதிமன்றம்...
ராக்கெட்ரி: குற்றமற்ற மாதவனும், பக்கபலமான சிம்ரனும்

ராக்கெட்ரி: குற்றமற்ற மாதவனும், பக்கபலமான சிம்ரனும்

சினிமா, திரைத் துளி
பார்த்தாலே பரவசம் (2001), கன்னத்தில் முத்தமிட்டால் (2002) ஆகிய படங்களில் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள் மாதவனும், சிம்ரனும். இந்தப் படங்கள் அவர்களை வெறும் ஜாலியான காதல் ஜோடிகளாக மட்டும் காட்டவில்லை, மாறாக சிக்கலான சூழ்நிலைகளை எதிர்கொள்பவர்களாகச் சித்தரிக்கப்பட்டிருந்தனர். காதலை பலப்படுத்துவதே இத்தகைய சோதனைகள்தானே! சோதனைகள் மற்றும் இன்னல்கள் கடினமான இருந்தால் தான் உறவு, அழகாகவும் வலுவானதாகவும் இருக்கும். மீண்டும் அத்தகைய சோதனையான, அழகான, வலுவான ஜோடிகளாக, 17 ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு, பன்மொழி திரைப்படமான 'ராக்கெட்ரி' படத்தில் மாதவனும் சிம்ரனும் இணைகின்றனர். ராக்கெட்ரி, நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டதால், கதாநாயகனின் தனிப்பட்ட வாழ்க்கையோடு இயைந்த, மிகவும் தீவிரமான கதையம்சத்தைக் கொண்டுள்ளது. திரு மற்றும் திருமதி நம்பியாக மாதவன் மற்றும் சிம்ரன் ஜோட...