Shadow

ராக்கெட்ரி: குற்றமற்ற மாதவனும், பக்கபலமான சிம்ரனும்

mr-and-mrs-nambi

பார்த்தாலே பரவசம் (2001), கன்னத்தில் முத்தமிட்டால் (2002) ஆகிய படங்களில் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள் மாதவனும், சிம்ரனும். இந்தப் படங்கள் அவர்களை வெறும் ஜாலியான காதல் ஜோடிகளாக மட்டும் காட்டவில்லை, மாறாக சிக்கலான சூழ்நிலைகளை எதிர்கொள்பவர்களாகச் சித்தரிக்கப்பட்டிருந்தனர். காதலை பலப்படுத்துவதே இத்தகைய சோதனைகள்தானே! சோதனைகள் மற்றும் இன்னல்கள் கடினமான இருந்தால் தான் உறவு, அழகாகவும் வலுவானதாகவும் இருக்கும். மீண்டும் அத்தகைய சோதனையான, அழகான, வலுவான ஜோடிகளாக, 17 ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு, பன்மொழி திரைப்படமான ‘ராக்கெட்ரி’ படத்தில் மாதவனும் சிம்ரனும் இணைகின்றனர்.

ராக்கெட்ரி, நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டதால், கதாநாயகனின் தனிப்பட்ட வாழ்க்கையோடு இயைந்த, மிகவும் தீவிரமான கதையம்சத்தைக் கொண்டுள்ளது. திரு மற்றும் திருமதி நம்பியாக மாதவன் மற்றும் சிம்ரன் ஜோடியாக நடிக்கின்றனர்.

‘ராக்கெட்ரி – நம்பி எஃபெக்ட்’ படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியான காலத்திலிருந்தே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படப்பிடிப்பு நடக்க நடக்கப் படிப்படியாக அதிக கவனத்தை ஈர்த்தது. குறிப்பிடத்தக்க விதத்தில், மாதவன் சால்ட் அண்ட் பெப்பர் நிற முடியைக் கொண்ட நம்பியாக மாறியது, அவர் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் என்பதும், இந்தப் புதிய புகைப்படமும் நம் கண்களை இமைக்க விடாமல் செய்திருக்கின்றன.

1990களில் நம் நாட்டில் நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் சம்பவங்களின் அடிப்படையில் இந்தத் திரைப்படம் உருவாகிறது. இஸ்ரோ விஞ்ஞானி எஸ்.நம்பி நாராயணன் ஒரு கிரையோஜெனிக் நிபுணர், அவரை ஒரு உளவாளி என கைது செய்து, பல ஆண்டுகள் சிறைப்படுத்தப்பட்டார். பின்னர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டது. அதை அடிப்படையாக கொண்டே இந்தப் படம் உருவாகி வருகிறது.