சாஹோ – 4 நாட்களில் 330 கோடி வசூல்!
இந்திய சினிமாவின் சாதனைகள் அனைத்தையும் முறியடித்து 330 கோடியை 4 நாட்களில் குவித்து புது சாதனை படைத்திருக்கிறது பிரபாஸின் சாஹோ.
தமிழக ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாததால், வசூலில் இங்கே சற்றே சுணக்கம் நிலவுகிறது. ஆனால், இந்திய அளவில் படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்து வருகிறது. இந்தியாவிற்கே ஒரு வழி என்றால், தமிழகத்திற்கு மட்டும் தனி வழி என்பதைப் பாராளுமன்றத் தேர்தலில் நிரூபித்தது போல், சாஹோ பட வசூலிலும் நிரூபித்துள்ளது.
வெளியான முதல் நாளிலேயே 100 கோடியைக் கடந்து சாதனை படைத்த சாஹோ படம், இரண்டாம் நாளில் உலகளவில் 205 கோடியைக் கடந்தது. வசூலில் புயலாய்ப் பாய்ந்து, இந்தியாவில் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தின் சாதனையை எளிதாய் முறியடித்தது. விநாயகர் சதுர்த்தி தினமான நேற்றைய திங்கட்கிழமையிலும் 14.20 கோடியைக் குவித்துள்ளது. வெளியான 4 நாட்களில் இந்தியாவின் அனைத்து சாதனைகளையும் தகர்த்தெற...