Shadow

Tag: Saala movie review in Tamil

சாலா விமர்சனம்

சாலா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
விட்னெஸ், வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களைத் தயாரித்த பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரித்துள்ளது. ஒரு பாருக்கான (Bar) போர் என்பதுதான் படத்திம் டேக்-லைன். படத்தின் ஒரு வரிக்கதையும் அதுவே! குணாக்கும் தங்கதுரைக்கும் இடையேயான தகராறில் ராயபுரம் பார்வதி பார் இழுத்து மூடப்படுகிறது. குணாவின் வளர்ப்புத் தம்பியான சாலா, பார்வதி பார் அண்ணனுக்குத்தான் என சபதம் எடுக்கிறார். இருபத்து மூன்று வருடங்களிற்குப் பிறகு, பார்வதி பார் ஏலம் விடப்படுகிறது. ஏலத்தில் வென்றது குணாவா, தங்கதுரையா என்பதே படத்தின் முடிவு. தங்கதுரையாக சார்லஸ் வினோத் நடித்துள்ளார். வில்லனாக அவர் தோளை உயர்த்தி நிமிரும் கணங்களில் எல்லாம் சாலாவால் மூக்கு உடைப்படுகிறார். தனது உயிரைக் காப்பாற்றிய சாலா, தாஸ் என இரண்டு சிறுவர்களை எடுத்து வளர்க்கிறார் குணா. குணாவாக அருள்தாஸ் நடித்துள்ளார். அவரது ஆகிருதிக்குக் கொடுக்கப்படும் வழக்கமான பாத்திரத்தை ...