சான்றிதழ் விமர்சனம்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் இருக்கும் கருவறை கிராமத்திற்கு சிறந்த கிராமத்திற்கான மத்திய அரசின் விருது ஜனாதிபதி அவர்களால் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட, ஊர்மக்கள் அந்த விருதை ஜனாதிபதியே இங்கு வந்து தங்களுக்கு வழங்கவேண்டும், இல்லையென்றால் விருதைப் புறக்கணிப்போம் என்று கூறுகின்றனர். அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த வந்த மந்திரி காரணமே இல்லாமல், ‘என்னையே எதிர்க்கிறீர்களா? இருங்க உங்களைப் பழிவாங்குகிறேன்’ என்று வெளியேறி எந்த ஆணியையும் புடுங்காமல் இருக்க, காரணமேயில்லாமல் அவரின் கரை வேஷ்டி பிடுங்கப்பட, காரணமேயில்லாமல் கண்டக் கண்ட கதாபாத்திரங்கள் எல்லாம் கதைக்குள் வர, காரணமேயில்லாமல் ஜனாதிபதி கொடுக்கவேண்டிய விருதை கவர்னர் கிராமத்திற்கே வந்து கொடுத்துவிட்டுப் போவதோடு முதல்பாதி முடிவடைய, காரணமேயில்லாமல் இரண்டாம் பாதி முழுக்க தறுதலை கிராமம் எப்படி கருவறை கிராமமாக மாறியது என்பத...