Shadow

Tag: Sathish

துடிக்கும் கரங்கள் – விமர்சனம்

துடிக்கும் கரங்கள் – விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
போதைப் பொருள் தடுப்புப்  பிரிவு ஐஜியின் மகள் மர்மமான முறையில் பூட்டிய காருக்குள் சடலமாக மீட்கப்படுகிறார்.  அதே நேரம் தன் மகனைத் தேடி சென்னைக்கு வரும் வயதான முஸ்லீம் பெரியவர்(சங்கிலி முருகன்), மகனின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருக்க, அவன் இருக்கும் இடம் தெரியாமல் தெருத் தெருவாக அலைகிறார். ‘கொத்து பரோட்டோ” என்கின்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தும் விமலும், சதீஷும் அந்த முஸ்லீம் பெரியவருக்கு உதவ எண்ணி அப்பெரியவரின் மகன் காணாமல் போனது தொடர்பான தகவலை வீடியோவாக வெளியிட்டு உதவி கேட்கின்றனர்.  இதைத் தொடர்ந்து இறந்து போன ஐ.ஜியின் மகளுக்கும் காணாமல் போன முஸ்லீம் பெரியவரின் மகனுக்கும் என்ன தொடர்பு..? அவர்கள் என்ன ஆனார்கள் என்கின்ற கேள்விக்கான விடை தேடும் முயற்சியே “துடிக்கும் கரங்கள்”.முதன்முறையாக ஆக்‌ஷன் ஹீரோவாக விமல் முயற்சித்திருக்கும் படம், முதல் சண்டைக் காட்சியில் ரவுண்டு கட்டி நிற்கும் ர...
சோலோ – டப்பிங் படம் இல்லை

சோலோ – டப்பிங் படம் இல்லை

சினிமா, திரைச் செய்தி
“இது நிச்சயமாக டப்பிங் படம் கிடையாது. முழுக்க முழுக்கத் தமிழிலும் தனியாக எடுத்திருக்கிறார் இயக்குனர் பிஜாய். இது நேரடி தமிழ்ப்படம் தான். இந்தப் படத்தில் வாய்ப்புக் கிடைக்க அன்சன் பால் தான் காரணம். ரெமோ படத்தில் நடிக்கிறப்பத்தான் அவர் பழக்கம். ஒருநாள், ‘துல்கர ஹீரோவா ஒரு படம் நடிக்கிறார்; பிஜாய் இயக்கிறார்’ எனச் சொல்லிக் கூப்பிட்டார். நான் இதுவரை 40 படத்திலும் ஒரே மாதிரி தான் நடிச்சிருக்கேன். ஆனா, ஒரே படத்திலேயே நாலு டிஃபரன்ட் கெட்டப்ல செமயா நடிச்சிருக்கார் துல்கர். தன்ஷிகாவும் செமயா நடிச்சிருக்காங்க” என்றார் சதீஷ். “ரெமோ படத்துக்குப் பிறகு எனக்குக் கிடைத்துள்ள ஒரு நல்ல வாய்ப்பு. சரியாக ஒரு வருடத்துக்கு முன்பு ஆடிஷன் போய், இந்தப் படத்துக்குள் வந்தேன். இன்று வரை இந்தப் படத்தோடு மிக நெருக்கமாக இருக்கிறேன். துல்கர், பிஜாய் உடன் அடுத்தடுத்த படங்களிலும் வேலை செய்ய விரும்புகிறேன்” என்றார் நடிகர்...