Shadow

Tag: SathishKumar

“மூன்று நாயகிகளுடன் நடித்திருப்பதை கீர்த்தி தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார்” – அசோக்செல்வன்

“மூன்று நாயகிகளுடன் நடித்திருப்பதை கீர்த்தி தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார்” – அசோக்செல்வன்

சினிமா, திரைச் செய்தி
அறிமுக இயக்குநர் சி.எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் சபா நாயகன் ஆகும். நாயகிகளாக மேகா ஆகாஷும், கார்த்திகா முரளிதரனும், சாந்தினி செளத்ரியும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரபல யூட்யூப் சேனலான நக்கலைட்ஸின் அருண், எருமைசாணி சேனல் புகழ் ஜெய்சீலன், Certified Rascals ஸ்ரீராம், போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர்த்து மயில்சாமி, துளசி, மைக்கேல் தங்கதுரை, ஸெர்லின் சேத், விவியா சந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அசோக் செல்வனின் ’ஓ மை கடவுளே’ திரைப்படத்தில் ஹிட் பாடல்களைக் கொடுத்த லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்துடன் இணைந்து அவரின் சீடர் தினேஷ் புருஷோத்தமனும், பிரபு ராகவும் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். Clear water பிக்சர்ஸ் சார்பாக அரவிந்த் ஜெயபாலன், i Cin...
குய்கோ விமர்சனம்

குய்கோ விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கதைக்காகத் திரைக்கதைக்காகப் பாராட்டப்பட்ட, வசூல் சாதனை புரிந்த, ஹிட் அடித்த திரைப்படங்கள் நிறைய உண்டு. ஆனால் காட்சிகளில் இருக்கும் நகைச்சுவைக்காகவும் நையாண்டிக்காகவும், அரசியல் பகடிகளுக்காகவும், கதாபாத்திர வடிவமைப்பிற்காகவும், இயல்பான யதார்த்தமான நடிப்பிற்காகவும் பாராட்டப்பட்ட, வசூல் சாதனை புரிந்த, ஹிட் அடித்த திரைப்படங்கள் நம்மிடையே மிகவும் குறைவு. அமைதிப்படை, களவாணி, தமிழ்ப்படம், ஒரு கிடாயின் கருணை மனு, ஆண்டவன் கட்டளை என வெகு சில படங்களே! அந்த வரிசையில் புதிதாக வந்திருக்கும் திரைப்படம் தான் இந்த "குய்கோ". அமைதிப்படை திரைப்படம் நம் நாட்டின் அரசியல் சூழலையும் அரசியல்வாதிகளையும் பகடி செய்த திரைப்படம். தமிழ்ப்படம், நம் தமிழ் சினிமாவில் இருந்த க்ரிஞ்சான விசயங்களையும், அவலங்களையும் பகடி செய்தது. அந்த வரிசையில் நாம் வாழும் வாழ்க்கையையும், நம்மிடம் இருக்கும் அறியாமையையும், பகட்டான வாழ்க்கை மீ...
80’ஸ் பில்டப் விமர்சனம்

80’ஸ் பில்டப் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சந்தானத்தின் தாத்தா R. சுந்தர்ராஜன் இறந்து விட, அவரது 5 ஆசைகளை நிறைவேற்றிய பின்பே அவரை அழைத்துச் செல்வேன் என வரமளிக்கிறார் எமன் K.S.ரவிக்குமார். தாத்தாவின் சாவிற்கு வரும் ஒரு பெண் மீது கண்டதும் காதல் கொள்கிறார் கமல் ரசிகரான சந்தானம். தாங்கள் திருடிய வைரங்கள், இறந்துவிடும் R. சுந்தர்ராஜனின் வயிற்றுக்குள் மாட்டிக் கொள்ள, அதை மீட்கப் பார்க்கின்றது மன்சூர் அலிகானின் குழு. இந்த மூன்று கதையும், ஒரு சாவு வீட்டில் நிகழ்கிறது. சந்தானத்தின் காதல் கை கூடியதா, R. சுந்தர்ராஜனின் ஆசைகள் நிறைவேறினவா, திருட்டுக் குழுவிற்கு வைரங்கள் கிடைத்ததா என்பதே படத்தின் முடிவு. மேலே உள்ள பத்தியிலுள்ள மூன்று கதையையும் ட்ரெய்லரியே காட்டி, ஒரு பக்காவான காமெடிப் படத்திற்கான உத்திரவாதத்தை ஏற்படுத்தி இருந்தார் இயக்குநர் கல்யாண். ஆனால், அண்ணனுக்கும் – தங்கைக்கும் எதற்கெடுத்தாலும் சவால் என புதுக்கதையில் படம் தொடங்கிப் பயணி...