Shadow

Tag: Shruti Haasan

சிலம்பப் பயிற்சியில் ஸ்ருதிஹாசன்

சிலம்பப் பயிற்சியில் ஸ்ருதிஹாசன்

இது புதிது, சினிமா, திரைத் துளி
உடற்தகுதியை நேர்த்தியாகப் பராமரிப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக அறியப்படும் நடிகை ஸ்ருதிஹாசன், தற்போது அவர் நடித்து வரும் 'கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தாலும், தற்காப்புக் கலை மற்றும் ஒருங்கிணைந்த தற்காப்பு கலைக்கான (மிக்ஸ்ட் மார்சியல் ஆர்ட்ஸ்) பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.  அவரின் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இப்பயிற்சி இருக்கிறது. மேலும் பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் தருணத்திலும் தன்னுடைய உடற்பயிற்சி முறையில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் இருப்பதையும் காண முடிகிறது. சமீபத்தில் நடிகை சுருதிஹாசன் தன்னுடைய சமூக ஊடகத்தில், தான் பயிற்சி பெற்று வரும் தற்காப்புக் கலை தொடர்பான திறன்களை வெளிப்படுத்தும் காணொளியைப் பகிர்ந்திருந்தார்.  இது தொடர்பாக அவர் குறிப்பிடும்போது, ''எனது தந்தையும் நடிகருமான கமல்ஹாசன் 'தேவர் மகன்' படத்தில் நிகழ்...
Kamal Haasan, Shruti Haasan, Lokesh Kanagaraj collaborates for ‘Inimel’ album song

Kamal Haasan, Shruti Haasan, Lokesh Kanagaraj collaborates for ‘Inimel’ album song

சினிமா, திரைச் செய்தி
Kamal Haasan's Raaj Kamal Films International (RKFI) recently announced their next project, a song , titled 'Inimel' with Shruti Haasan and Lokesh Kanagaraj. The project marks RKFI's second collaboration with Lokesh Kanagaraj after Vikram which was a resounding success at the global box office. It also marks Lokesh’s debut as an actor as mentioned in the poster. 'Inimel', which means From Now On, is a song that portrays all stages of love in a modern urban relationship along with its ebbs and flows. Sung and composed by Shruti Haasan herself, Inimel has been penned by Kamal Haasan and it perfectly captures the dynamics of a contemporary romance which is bound to strike a chord with the audiences. The track has been conceptualised by Shruti who has previously conceived her successful inde...
பேசுபொருளான ‘இனிமேல்’ ஆல்பம் பாடல்

பேசுபொருளான ‘இனிமேல்’ ஆல்பம் பாடல்

சினிமா, திரைச் செய்தி
உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம், சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோருடன் 'இனிமேல்' என்ற தலைப்பில் ஒரு பாடலை அறிவித்தது. உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் மகத்தான வெற்றியைப் பெற்ற விக்ரம் திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் RKFI இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. போஸ்டரில் குறிப்பிட்டுள்ளபடி லோகேஷ் ஒரு நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 'இனிமேல்' பாடல் நவீன நகர்ப்புற ரிலேஷன்ஷிப்பில், காதலின் அனைத்து நிலைகளையும் அதன் ஏற்ற இறக்கங்களுடன் சித்தரிக்கும் பாடலாகும். ஸ்ருதி ஹாசன் பாடி, இசையமைத்துள்ள ‘இனிமேல்’ பாடலை, கமல்ஹாசன் எழுதியுள்ளார். இப்பாடல் தற்போதைய தலைமுறையில் காதல் இயங்கும் விதத்தைக் கச்சிதமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. ‘எட்ஜ்’, ‘ஷீ இஸ் எ ஹீரோ’ மற்றும் ‘மான்ஸ்டர் மெஷின்’ போன்ற வெற்றிகரமான சுயாதீன ஆல்பம் பாடல...
ஸ்ருதிஹாசனின் டபுள் தமாகா பொங்கல்

ஸ்ருதிஹாசனின் டபுள் தமாகா பொங்கல்

சினிமா, திரைத் துளி
உலகநாயகன் கமல்ஹாசனின் வாரிசாக இருந்தாலும், தன்னுடைய தனித்துவமான திறமையினால் திரை உலகில், தனக்கென ஓர் அடையாளத்தைப் பதித்தவர் ஸ்ருதிஹாசன். மில்லியன் கணக்கிலான மக்களை பின்தொடர்பாளர்களாகக் கொண்டுள்ள ஸ்ருதிஹாசன், சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வருகிறார். தன்னைப் பற்றிய செய்திகளையும், தன் உணர்வுகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நேர்மையானவர். இதற்கு, சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்ட காணொளிகளே சான்று. நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் தயாராகி வரும் இரண்டு தெலுங்குத் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'வால்டேர் வீரய்யா' என்ற திரைப்படத்திலும், மாஸ் ஹீரோ பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகி இருக்கும் 'வீரசிம்ஹா ரெட்டி' எனும் திரைப்படத்திலும் நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த இரண்டு திரைப்படங்களும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில...
“பேச மறுக்கப்படும் தலைப்புகளை விவாதிப்போம்” – ஸ்ருதிஹாசன்

“பேச மறுக்கப்படும் தலைப்புகளை விவாதிப்போம்” – ஸ்ருதிஹாசன்

சமூகம்
தென்னிந்தியத் திரைத்துறையின் முன்னணி நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன் தனது பிறந்தநாளை வரும் ஜனவரி 28 ஆம் தேதி கொண்டாடவுள்ளார். தனது பிறந்தநாளன்று, சமூகம் மற்றும் சுற்றுப்புறம் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ரசிகர்களுடன் உரையாட முடிவு செய்துள்ளார். இதனையொட்டி மனநலம், திரைப்படம் மற்றும் ஊடகங்களில் பெண்கள், ஃபேஷன் துறையின் நிலைத்தன்மை போன்ற தலைப்புகளில், சமூக வலைதளப் பக்கத்தில் ஜனவரி 27 முதல் அவர் தொடர்ச்சியான நேரலை நிகழ்வுகளை நடத்தவுள்ளார். இந்த நேரலை நிகழ்வுகள் மூலம், ஸ்ருதிஹாசன், பொதுவாகச் சமுகத்தில் விவாதிக்க மறுக்கப்படும், பல தலைப்புகளில் விவாதங்களை, உரையாடலை மேற்கொண்டு, அந்த விசயங்களின் மீது கவனத்தை ஈர்க்க விரும்புகிறார். இந்த நேரலை அமர்வுகளில் ஸ்ருதிஹாசன் பல்வேறு செல்வாக்கு மிக்க பிரபலங்கள் மற்றும் தொகுப்பாளர்களுடன் இணைந்து, இந்தத் தலைப்புகளைப் பற்றி விரிவாக விவாத...