Shadow

Tag: Sigai thirai vimarsanam

சிகை விமர்சனம்

சிகை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ZEE5 எனும் செயலியில் படம் நேரடியாக வெளியாகிறது. திரையரங்கு வெளியீட்டுக்கு வெளியே மாற்று வழிகளை நோக்கி தமிழ் சினிமா நகர்வது ஆரோக்கியமான விஷயம். நெட்ஃப்ளிக்ஸில் பிரகாஷ்ராஜ் நடித்த 'சில சமயங்களில்' படம் வெளியானதும் குறிப்பிடத்தக்க வேண்டிய ஒன்று. பிரசாத் ஒரு பிம்ப் (Pimp). சந்தோஷ் எனும் இளைஞனுக்கு நிம்மி எனும் பெண்ணை அனுப்பி வைக்கிறான். போன நிம்மி விடிந்த பிறகும் திரும்பி வராததோடு, அவளைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை என பதற்றம் ஆகிறான் பிரசாத். சந்தோஷின் வீட்டில் சந்தோஷ் இறந்து கிடக்க, நிம்மிக்கு என்ன ஆனது என விறுவிறுப்பாகப் பயணிக்கிறது படம். சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லராக, விறுவிறுப்பாகவும் அழுத்தமாகவும் பயணிக்கிறது கதை. இரண்டாம் பாதியின் கனமான கதையோ, முற்றிலும் வேறு ஜானருக்குப் படத்தை அழைத்துச் செல்கிறது. ஆனால் முதற்பாதி போல் கோர்வையாக இல்லாமல், இன்ன உணர்வினைப் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்த...