Shadow

Tag: Sisu: Road to Revenge

SISU: அழிவில்லாத நாயகனின் அதகளமான பழிவாங்கும் சம்பவம்

SISU: அழிவில்லாத நாயகனின் அதகளமான பழிவாங்கும் சம்பவம்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
இறக்க மறுக்கும் அழிவில்லாத நாயகனான கோஷேய், முதல்பாகமான சிசு (SISU) படத்தில், தங்கக்கட்டிகளுக்காக நாஜிக்களை துவம்சம் செய்திருப்பார். நவம்பர் 21 வெளிகாயவுள்ள அதன் அடுத்த பாகத்தில், தன் குடும்பத்தைக் கொன்ற இரஷ்ய இராணுவ வீரரைப் பழிவாங்கக் களம் இறங்குகிறார் நாயகன். மனித இனத்தின் ஆதி உணர்ச்சிகளில் ஒன்றான பழிவாங்கும் உணர்ச்சிதான் இப்படத்தின் மையக்கரு. இப்படத்தின் ட்ரெய்லரிலேயே ரத்தம் தகிக்கும் அந்தத் தகிப்பினை உணர முடிகிறது. ஒரு மனிதனின் அந்தப் பழி வாங்கும் தகிப்பைத் திரையில் கொண்டு வந்திருக்கும் ஜோர்மா தோமிலாவின் நடிப்பை மிகவும் சிலாகிக்கிறார் இயக்குநர் ஜல்மாரி ஹெலாண்டர். ஆவர், “ஜோர்மாவுடன் வேலை செய்வது எப்போதும் ஓர் இனிமையான உணர்வைத் தரும். அவர் தனக்கே உரிய தனித்துவமான முறையில், முகத்தில் உணர்ச்சிகளை கொண்டு வந்துவிடுவார். குறிப்பாகக் கோபத்தையும் சோகத்தையும் வசன உதவியின்றியே அவரால் வெளிப்படுத்த...