Shadow

Tag: Sita Ramam review in Tamil

சீதா ராமம் விமர்சனம்

சீதா ராமம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கதை, திரைக்கதை, நடிப்பு, மேக்கிங், ஒளிப்பதிவு, இசை, உடை வடிவமைப்பு, நடனம் என எல்லா வகையிலும் நிறைவைத் தருகிறது சீதா ராமம். காஷ்மீர், காதல் என மனதைக் குளிர வைக்கும் படம். பாகிஸ்தான் பிரிகேடியர் தாரிக்கின் பேத்தி அஃப்ரீன், 1965 இல் இந்தியன் லெஃப்டினென்ட் ராம் எழுதிய கடிதத்தை அவரது காதலி சீதா மகாலக்‌ஷ்மியிடம் ஒப்படைக்க, 1985 ஆம் ஆண்டு இந்தியா வருகிறார். அஃப்ரீனின் தேடல் படலத்தில், ராம் - சீதாவின் காதல் அழகாய் மொட்டவிழ்த்து மலரத் தொடங்குகிறது. கூடவே, ராம் தன் காதலிக்கு எழுதிய கடிதம் எப்படி பாகிஸ்தானின் பிரிகேடியருக்குக் கிடைத்தது என்ற சஸ்பென்ஸைக் கடைசி வரை தக்க வைத்துள்ளனர். எந்தக் கதாபாத்திரத்திற்கும் தன்னை அசால்ட்டாகப் பொருத்திக் கொள்ளும் மராத்தி நடிகரான சச்சின் கடேகர், பிரிகேடியர் தாரிக் பாத்திரத்தை ஏற்றுள்ளார். படத்தின் இரண்டாவது கதாநாயகன் எனச் சொல்லக் கூடிய அளவுக்கு மிகச் சிறப்பாக வடி...