Shadow

Tag: Skydance Media

MI – The Final Reckoning | ரசிகர்களை மகிழ்விக்க முன்னதாகவே திரையிறங்குகிறது

MI – The Final Reckoning | ரசிகர்களை மகிழ்விக்க முன்னதாகவே திரையிறங்குகிறது

அயல் சினிமா, திரைத் துளி
ஈதன் ஹன்ட் எதிர்பார்த்ததை விட முன்னதாகவே களமிறங்குகிறார். அவரது சாத்தியமற்ற மிஷனைக் காண சீட் பெல்ட்டினை இறுக்கிக் கட்டிக் கொண்டு தயாராகுங்கள். பாரமெளன்ட் பிக்சர்ஸ் இந்தியா, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘மிஷன்: இம்பாசிபிள் - தி ஃபைனல் ரெக்கனிங்’ படத்தைத் திட்டமிட்டதை (மே 23) விட 6 நாட்கள் முன்னதாக, இப்போது மே 17, 2025 சனிக்கிழமை அன்றே திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. ஐகானிக் ஃபிரான்சைஸின் ரசிகர்கள் இப்போது ஈதன் ஹண்டின் இறுதிப் பணியைப் பெரிய திரையில் காண அதிக நாள் காத்திருக்க வேண்டியதில்லை. ஈதன் ஹன்ட்டின் கடைசி மிஷன் என்பதால், இப்படத்தொடரின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் ததும்பும் எதிர்பார்ப்பில் உள்ளனர். டாம் க்ரூஸின் கடைசி மிஷன், இருக்கையின் நுனியில் அமர வைக்கக் கூடிய அதிரடி ஆக்ஷனாகவும், கிளாஸிக்காகவும், அதே சமயம் உணர்ச்சிப்பூர்வமானதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
மிஷன் இம்பாசிபிள்: ஆக்‌ஷன் ரெக்கோனிங்

மிஷன் இம்பாசிபிள்: ஆக்‌ஷன் ரெக்கோனிங்

இது புதிது
உலக சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் டாம் க்ரூஸின் 'மிஷன் இம்பாசிபிள்: டெட் ரெக்கோனிங்' படம் ஜூலை 14 ஆம் தேதி அன்று வெளியாகிறது. இந்தியாவில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் வெளியாகிறது. பாராமெளன்ட் பிக்சர்ஸ், ஸ்கைடான்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து டாம் க்ரூஸும் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.   இப்படத்தொடர், 1996 இல் தொடங்கி, அதன் 7 ஆவது பாகம் தற்போது 2023 இல் வெளியாகவுள்ளது. 'டெட் ரெக்கோனிங்' என்பது நகரும் பொருளின் இருப்பிடத்தை (Position) கணக்கீடு செய்யும் முறையைக் குறிக்கும் பதமாகும். முக்கியமாகக் கடற்பயணத்தில் பயன்படுத்தப்படும் சொற்றொடராகும். இப்படத்தின் கதை, ப்ரூஸ் கெல்லரின் தொலைக்காட்சித் தொடரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் தொடர் படங்கள் எதுவுமே இதுவரை அக்ஷனில் ஏமாற்றியதில்லை. ட்ரெய்லரில் காணக்...