Shadow

Tag: Smurfs movie review in Tamil

ஸ்மர்ஃப்ஸ்: தி லாஸ்ட் வில்லேஜ் விமர்சனம்

ஸ்மர்ஃப்ஸ்: தி லாஸ்ட் வில்லேஜ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
அனிமேஷன் படங்கள் குழந்தைகளுக்கானது எனத் தவறான கற்பிதம் உள்ளது. ஆனால், 'ஸ்மர்ஃப்ஸ்: தி லாஸ்ட் வில்லேஜ்', முற்றிலுமே குழந்தைகளுக்கான ஒரு படம். ஏனென்றால் ஸ்மர்ஃப்ஸ் 1 & 2 போல், இது லைவ் ஆக்ஷனுடன் கலந்த அனிமேஷன் படமன்று. முதல் இரண்டு பாகங்களுக்குச் சம்பந்தமில்லாத தனி படம் என்பதோடு, வண்ணஜாலம் நிகழ்த்தும் முழு அனிமேஷன் படம். ஒரு தொலைந்த கிராமத்தைச் சாகசப் பயணமொன்றில் கண்டுபிடிக்கிறார்கள் ஸ்மர்ஃபெட்டும் அவளது மூன்று நண்பர்களும். கதையாக, ஒரு வரியில் சொல்லும் பொழுது இருக்கும் சுவாரசியம் கூட திரைக்கதையில் இல்லை. அதனால் என்ன? 90 நிமிடங்கள் குழந்தைகளைக் குழந்தைகளாக வைத்திருப்பதோடு, அவர்களை மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது படம். ‘பெட் டைம் மூவி (Bed time movie)’ என்று கூட இப்படத்தை வகைப்படுத்தலாம்.  ஆண்களால் நிறைந்த ஸ்மர்ஃப்ஸ் உலகில், களி மண்ணில் இருந்து தயாரிக்கப்பட்ட ஸ்மர்ஃபெட்டுக்...