
ஸ்பைடர்-மேன்: ஹோம்கமிங் விமர்சனம்
ஸ்பைடர்- மேன் படங்களின் ரசிகர் நீங்களென்றால், கண்டிப்பாக இது உங்களுக்கான படமில்லை. மார்வல் ஸ்டுடியோஸ், கதை சொல்லும் பாணியில் மிகுந்த வேறுபாடினைக் காட்டியுள்ளனர். ஸ்பைடர்-மேனுக்குப் புது அடையாளம் கொடுத்துள்ளார் திரைக்கதையாசிரியர்களில் ஒருவரும், இயக்குநருமான ஜோன் வாட்ஸ்.
‘ஹோம்கமிங்’ என்றால் பள்ளியை விட்டுச் சென்ற சீனியர்களை அமெரிக்க மாணவர்கள் வரவேற்கும் வருடாந்திர நிகழ்வு. ஸ்பைடர்-மேன் படித்து வரும் பள்ளி அதற்காகத் தயாராகி வருகிறது.
நம்மூரில், 14 வயது நிரம்பிய பதின்ம சிறுவனுக்கு இருக்கும் ஆகப் பெரும் சவால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு. ஸ்பைடர்-மேனுக்கோ, சூப்பர் ஹீரோ ஆகவேண்டும்; அவெஞ்சர்ஸ் குழுவில் இடம் பிடிக்கவேண்டும் என்பது லட்சியமாக இருக்கிறது. ஏதாவது நல்லது செய்து சூப்பர் ஹீரோ ஆகி விட வேண்டுமென வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார். அதற்காக, முகவரியைத் தேடித் தவிப்பவர்களுக்குக் கூட உதவுகிறா...