Shadow

Tag: Spider Man thirai vimarsanam

Spider-Man: Brand New Day விமர்சனம்

Spider-Man: Brand New Day விமர்சனம்

அயல் சினிமா, இசை விமர்சனம், இது புதிது, சினிமா
மார்வெல் லோகோ வரும் பொழுதே கதை சொல்லத் தொடங்கிவிடுகின்றனர். பொதுவாக லோகோவில் வரும் முப்பரிமாண M A R V E L எழுத்துகளில், மார்வெல் காமிக்ஸின் சூப்பர் ஹீரோக்கள் அனைவரும் வருவார்கள். இம்முறை பீட்டர் பார்க்கரைக் காட்டி அவர் மறைந்து போவது போல் வருகிறது. இப்படியாகப் படத்தின் தொடக்கமே அட்டகாசம். முந்தைய பாகங்களின் ஸ்பைடர் மேன் போலல்லாமல், கூடுதல் முதிர்ச்சியுடன், அண்டை அயலார் மீது அதே நட்புடனும் நியூ-யார்க்கைக் காப்பாற்றுகிறார் பீட்டர் பார்க்கர். ஆனால், நண்பனாலும் காதலியாலும் மறக்கப்பட்ட வலியையும், மே பார்க்கரை இழந்த துக்கத்தையும் சுமந்து திரிகிறார். அவரைப் போலவே, பிரிவின் வேதனையில் இருக்கும் ஒரு நபரால் டேமேஜ் கன்ட்ரோல் துறை தொடர் தாக்குதலுக்கு உள்ளாகிறது. அந்நபர், ஒருவரது மூளைக்குள் ஊடுருவி அவரைத் தன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டு இயங்க வைக்கிறார். அதுவும் மின்னல் வேகத்தில், ஒருவரது மூளைய...
ஸ்பைடர்-மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ் விமர்சனம்

ஸ்பைடர்-மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
(Universe – பிரபஞ்சம்; Multi-Verse – பன்னண்டம்; Spider-Verse – ஸ்பைடர் அண்டம்) பன்னண்டத்தின் வெவ்வேறு பிரபஞ்சங்களில் இருந்து வரும் ஸ்பைடர் - மேன்களும், ஸ்பைடர் - வுமன்களும், தத்துக்குட்டி ஸ்பைடர்-மேனான மைல்ஸ் மொரால்ஸுடன் இணைந்து, வில்லன் கிங்பின்னின் கொலைடரை அழிப்பது, இத்தொடரின் முதற்பாகமான ‘ஸ்பைடர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ்’ படத்தின் கதையாகும். இந்தப் பாகத்தில், தன்னைக் காண வரும் க்வென் ஸ்டேசியுடன் இணைந்து பன்னண்டத்தின் பல பிராபஞ்சங்களுக்குள் ஊடுருவுகிறார் மைல்ஸ் மொரால்ஸ். பன்னண்டத்திலுள்ள பல ஸ்பைடர்-மேன்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட ஸ்பைடர் சொசைட்டிக்கும் செல்கிறார் மைல்ஸ் மொரால்ஸ். போன பாகத்தில், அழகான சின்னஞ்சிறு பன்றி ஸ்பைடர்-மேன் பூமிக்கு வரும். ஆனால், ஸ்பைடர் சொசைட்டியிலோ, ஆச்சரியமூட்டும் எண்ணிலடங்கா ஸ்பைடர்-மேன்கள் உள்ளனர். டைனோசர் ஸ்பைடர்-மேன். பூனை ஸ்பைடர்-மேன், குதிரை வ...
ஸ்பைடர்-மேன்: ஹோம்கமிங் விமர்சனம்

ஸ்பைடர்-மேன்: ஹோம்கமிங் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஸ்பைடர்- மேன் படங்களின் ரசிகர் நீங்களென்றால், கண்டிப்பாக இது உங்களுக்கான படமில்லை. மார்வல் ஸ்டுடியோஸ், கதை சொல்லும் பாணியில் மிகுந்த வேறுபாடினைக் காட்டியுள்ளனர். ஸ்பைடர்-மேனுக்குப் புது அடையாளம் கொடுத்துள்ளார் திரைக்கதையாசிரியர்களில் ஒருவரும், இயக்குநருமான ஜோன் வாட்ஸ். ‘ஹோம்கமிங்’ என்றால் பள்ளியை விட்டுச் சென்ற சீனியர்களை அமெரிக்க மாணவர்கள் வரவேற்கும் வருடாந்திர நிகழ்வு. ஸ்பைடர்-மேன் படித்து வரும் பள்ளி அதற்காகத் தயாராகி வருகிறது. நம்மூரில், 14 வயது நிரம்பிய பதின்ம சிறுவனுக்கு இருக்கும் ஆகப் பெரும் சவால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு. ஸ்பைடர்-மேனுக்கோ, சூப்பர் ஹீரோ ஆகவேண்டும்; அவெஞ்சர்ஸ் குழுவில் இடம் பிடிக்கவேண்டும் என்பது லட்சியமாக இருக்கிறது. ஏதாவது நல்லது செய்து சூப்பர் ஹீரோ ஆகி விட வேண்டுமென வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார். அதற்காக, முகவரியைத் தேடித் தவிப்பவர்களுக்குக் கூட உதவுகிறா...