ஸ்பைடர் விமர்சனம்
தெலுங்கு நடிகரான பிரின்ஸ் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் முதல் நேரடி தமிழ்ப்படம்; படத்தின் பட்ஜெட் 125 கோடி என நீளும் சிறப்புகளுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல் இருப்பது, இது ஏ.ஆர்.முருகதாஸின் படம்.
பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக் கேட்கும் ஒற்று (SPY) வேலை செய்கிறார் நாயகன். அப்படிக் கேட்பதில் இருந்து கிடைக்கும் மைனாரிட்டி ரிப்போர்ட்-டினைக் கொண்டு, தவறுகள் நடக்கும் முன் தடுக்கிறார் ஸ்பைடரான நாயகன்.
இறந்தவர்களினுடைய உறவினர்களும் நண்பர்களும் அழுகின்ற குரல்களைக் கேட்டு ரசிக்கும் சாடிஸ்ட் (sadist) ஒருவனை, ஒற்றேவல் புரிந்து பிடிக்கிறார் ஸ்பைடர். அவன் தீட்டி வைத்திருக்கும் கொடூரமான திட்டங்களை ஸ்பைடர் தடுத்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
படம் ஹைதராபாதில் தொடங்கி அங்கேயே முடிகிறது. படத்தின் தொடக்கத்தில், கதாபாத்திரங்களின் உதட்டசைவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆரம்...