Shadow

Tag: Srikara Studios

VD12 – சூர்யாவின் குரலில் ‘கிங்டம்’ டீசர்

VD12 – சூர்யாவின் குரலில் ‘கிங்டம்’ டீசர்

Teaser, காணொளிகள், சினிமா
கௌதம் தின்னனுரி இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் #VD12 படத்திற்கு 'கிங்டம்' என்ற தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு டீசர் வெளியாகியுள்ளது.  டீசரில், சூர்யா தமிழுக்கும், ஜூனியர் என்டிஆர் தெலுங்கிற்கும், ரன்பீர் கபூர் இந்திக்கும் குரல் கொடுத்துள்ளார்கள். இது ரசிகர்களுக்கும் சிறந்த டீசர் அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. இந்தப் படம் சிறப்பாக வர நடிகர் விஜய் தேவரகொண்டா தனது கடின உழைப்பைக் கொடுத்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் சரியான கதையாக இந்தப் படத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா. அனிருத் ரவிச்சந்தர் படத்திற்கு இசையமைக்கிறார். நவீன் நூலி படத்தொகுப்பைக் கையாள, கலை இயக்குநராக அவினாஷ் கொல்லா பணியாற்றுகிறார். ஜோமோன் டி.ஜான் மற்றும் கிரீஷ் கங்காதரன் இருவரும் ஒளிப்பதிவு செய்கின்றனர். சித்தாரா என்டர்டெயின்மென்ட்...
VD12 – விஜய் தேவரகொண்டாவின் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படம்

VD12 – விஜய் தேவரகொண்டாவின் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படம்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
விஜய் தேவரகொண்டா,  கௌதம் தின்னனுரி, சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் 'VD 12' திரைப்படம், 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதி அன்று வெளியாகிறது. 'ரௌடி' என ரசிகர்களால் அன்புடன் போற்றப்படும் விஜய் தேவரகொண்டா  இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் புகழ் பெற்றிருக்கிறார். இவர் தற்போது 'ஜெர்ஸ்ஸி' & 'மல்லி ராவா' ஆகிய படங்களின் மூலம் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநரான கௌதம் தின்னனுரி இயக்கத்தில் உருவாகி வரும் 'VD 12 'எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதிரடி ஆக்‌ஷன் என்டர்டெய்னராக உருவாகி வருகிறது இத்திரைப்படம். இந்தப் படத்திற்கு தற்போது 'VD 12' எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டிருக்கிறது. பார்வையாளர்களுக்கு இதற்கு முன் எப்போதும் இல்லாத புதுமையான அனுபவத்தை வழங்குவதற்காகத் தயாரிப்பாளர்கள் மிகுந்த கவனத்துடனும், ஆர்வத்துடனும் அயராது உழைத்து வருகின்றனர். தற்போது ...