Shadow

Tag: Sruthi Hassan

ஸ்ருதி ஹாசன் | பாங்காக் இசை நிகழ்ச்சி

ஸ்ருதி ஹாசன் | பாங்காக் இசை நிகழ்ச்சி

சமூகம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'கூலி' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காகத் தற்போது தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரில் படக்குழுவினருடன் ஸ்ருதிஹாசன் முகாமிட்டிருக்கிறார். முன்னணி நட்சத்திர நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன் திட்டமிடப்படாத ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். படப்பிடிப்பில் தன் பங்களிப்பை நிறைவு செய்த பிறகு ஸ்ருதி ஹாசனும், அவருடைய குழுவினரும் நகரத்தை வலம் வந்தனர். அந்தத் தருணத்தில் அங்கு நேரடியாக இசை நிகழ்ச்சி நடத்தும் கலை அரங்கத்தைப் பார்வையிட்டனர். பரபரப்பான சூழ்நிலையும், நேரடியாக இசைக் குழுவின் இசை நிகழ்ச்சியை முழுமையாக ரசிக்கும் கூட்டமும் அங்கு இருக்க, மகிழ்ச்சி அடைந்த ஸ்ருதிஹாசன் அவர்களை ஊக்குவிப்பதற்காக மேடை ஏறினார். அவருடைய இந்தத் தன்னிச்சையான முடிவிற்கு அங்குக் கூடியிருந்த ரசிகர்களிடத்தில் ஆரவாரமான...
உயிர் நண்பன் பரம எதிரியான பரமபத விளையாட்டா…?? சலார் பார்ட் 1 சீஸ் ஃபயர் – 2வது டிரைலர்

உயிர் நண்பன் பரம எதிரியான பரமபத விளையாட்டா…?? சலார் பார்ட் 1 சீஸ் ஃபயர் – 2வது டிரைலர்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
'கே ஜி எஃப் சீரிஸ்' போன்ற பிரம்மாண்டமான பிளாக் பஸ்டர் ஹிட்டுகளை வழங்கிய ஹோம்பாலே ஃபிலிம்ஸ் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'சலார்' படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை தனித்துவமான பாணியில் வெளியிட்டு, வித்தியாசமான சினிமா அனுபவத்தை வழங்கி உள்ளது. இந்த முன்னோட்டம்- அடக்க இயலாத பிரபாஸுடன் தொடங்குகிறது. இத்தகைய காட்சிகளில் வழங்கப்படும் மயக்கும் அழகியல் காட்சிகள் மற்றும் துடிப்பான சண்டை காட்சிகள் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.‌இந்தியா முழுவதும் 5000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் 'சலார்'- ஒரு சினிமா கொண்டாட்டமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. மேலும் சமீபத்திய ட்ரெய்லரில் கான்சார் எனப்படும் உலகத்தையும், பிருத்விராஜ் மற்றும் பிரபாஸ் என்ற இரு நண்பர்களின் புதிரான கதையையும், கவர்ந்திழுக்கும் காட்சிகளுடன் வழங்குகிறது. முரட்டுத்தனமான கதாபாத்திரத்தை சித்தரிக்க...