
PEDDI ராம்சரண் – சிவராஜ்குமார் | திரையில் ஓர் அட்டகாசமான குரு சிஷ்யன் உறவு
மெகா பவர் ஸ்டார் ராம்சரண் நடிப்பில், இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’, ஒரு கிராஸ்-ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கிராமத்து விளையாட்டுப் பின்னணியுடன் ஆக்ஷன், உணர்வுகள் மற்றும் வெற்றிக்கான போராட்டத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், ரசிகர்களிடையே ஏற்கெனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புச் சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில் பேசிய ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு, "சேது, வாரணம் ஆயிரம், எந்திரன் போன்ற படங்கள் எனது திரைப்பயணத்தில் முக்கிய மைல்கற்களாக அமைந்தது போல, பெத்தி திரைப்படமும் எனக்கு மிகவும் முக்கியமான படமாக இருக்கும். இயக்குநர் புச்சி பாபு இந்தப் படத்திற்காக அற்புதமான திரைக்கதையை எழுதியிருக்கிறார். ஒரு திரைப்படம் க...





