மிருகா விமர்சனம்
மிருகமாகிவிட்ட ஒரு மனிதனைப் பற்றிய படம். பணக்கார விதவைகளைக் குறி வைத்து, அவர்களை அணுகி நற்பெயர் எடுத்து, பணத்திற்காக அவர்களைக் கல்யாணம் செய்து, அவர்களைக் கொன்றுவிடும் சைக்கோ தான் படத்தின் எதிர்நாயகன். அவனிடமிருந்து நாயகி தப்பினாரா என்பதுதான் படத்தின் கதை.
கதை ஊட்டியில் நடக்கிறது. எஸ்டேட்டில், man-eater ஆக மாறிவிடும் புலி ஒன்று முக்கிய ரோலில் வருகிறது. புலி வரும் காட்சிகளுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் கணினி வரையியல் (CG) காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன. க்ளைமேக்ஸின் த்ரில்லிங் அனுபவத்திற்குப் புலி பொறுப்பெடுத்துக் கொள்கிறது.
படத்தின் எதிர்நாயகனாக ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். படம் இவரது வில்லத்தனத்தைச் சுற்றியே நகர்கிறது. ஆனால், ஸ்ரீகாந்தின் மிதமான நடிப்பு, கதாபாத்திரத்தின் சீரியஸ்தன்மையை நீர்த்துப் போகச் செய்கிறது. பார்வையாளர்களின் வெறுப்பைச் சம்பாதிக்க வேண்டிய கதாபாத்திரத்திலும், பாந்தமாகத் தோ...