
“நானும் ரன்பீரும் விலங்குகள் போல் சண்டையிடுவோம்” – பாபி தியோல்
இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில், பூஷன் குமார், கிரிஷன் குமார் டி சீரிஸ், முராத் கெடானி சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வங்கா பத்ரகாளி பிக்சர்ஸ், இணைந்து வழங்கும் “அனிமல்” திரைப்படம், டிசம்பர் 1, 2023 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி படக்குழுவினர் இந்தியா முழுதும் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னைக்கும் வருகை தந்திருந்தனர்.
தயாரிப்பாளர் பூஷன் குமார், “இது சந்தீப் வங்காவின் படம். அவருடன் கபீர் சிங் படத்தில் இணைந்து பணியாற்றினோம். அவர் எங்களிடம் அனிமல் கதையைச் சொன்ன போது, மிக வித்தியாசமானதாகப் புதுமையானதாக இருந்தது. அவரது திரை உருவாக்கம் பற்றித் தெரியும் என்பதால் உடனடியாக இப்படத்தை ஆரம்பித்தோம். இப்படத்திற்காக ரன்பீர், ராஷ்மிகா, பாபி என எல்லோரும் கடுமைய...