Shadow

Tag: Tamannah

மனதில் நிற்கும் பாரதி – ‘கண்ணே கலைமானே’ தமன்னா

மனதில் நிற்கும் பாரதி – ‘கண்ணே கலைமானே’ தமன்னா

சினிமா, திரைச் செய்தி
'கண்ணே கலைமானே' படத்தினைப் பற்றி நடிகை தமன்னா, "ஒரு வருடத்திற்கு முன்னர் இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னர், இந்தப் படத்துடனும், மொத்த குழுவுடனும் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இன்று காலை (17-02-2019) வேறு ஒரு புதிய படத்தைப்  பார்ப்பது போல் இருந்தது. நான் மிகவும் திருப்தியடைந்தேன். சீனு ராமசாமி சார் படத்தில் பல உணர்வுகளைக் கையாண்டிருக்கிறார். சப்டைட்டில் இல்லாமல் இந்தப் படத்தை பார்த்தால் கூட ஒருவர், இந்தப் படத்தின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும், அதை விரும்பவும் முடியும் என நான் நம்புகிறேன். இன்னமும் பாரதி கதாபாத்திரம் எனக்குள் இருக்கிறது. பொதுவாக, 'நாம் ஒன்றாக வேலை செய்யலாமா?' என்று எந்த ஒரு ஹீரோவிடமும் நான் கேட்பதில்லை. ஆனால் நான் இப்போது உதயநிதி ஸ்டாலினிடம் அடுத்தடுத்த படங்களில் என்னைப் பரிசீலனை செய்யுங்கள் எனக் கோரிக்கை வைக்கிறேன். ஏனெனில் இன்னும் பாரதியும் கமலகண்ணனும...
பாகுபலி 2 விமர்சனம்

பாகுபலி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பாகுபலி - தொடக்கம் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் எவ்வளவு உழைப்பினைச் செலுத்தியுள்ளனர் என்ற பிரமிப்பு, டைட்டில் கார்டிலிருந்தே தொடங்கி விடுகிறது. நல்ல திரையரங்கில் இப்படத்தினைப் பார்த்தால், அதன் பிரம்மாண்டத்தில் இருந்தும், விஷூவல் மேஜிக்கில் இருந்தும் மீளக் குறைந்தது ஓரிரு நாட்களாவது ஆகும். நேரடியாக ஃப்ளாஷ்-பேக்கிற்குள் நுழைந்து விடுகின்றனர். இயக்குநர் ராஜமெளலி சொன்னது போல், கதாபாத்திரங்களை முதல் பாகத்தில் ரசிகர்களுக்கு அறிமுகம் மட்டுமே செய்து வைத்துள்ளார். உண்மையில், கதை இந்த முடிவில் தான் தொடங்குகிறது. படத்தின் முதல் பாதி மிக அற்புதமானதொரு கலைப் படைப்பு. அமரேந்திர பாகுபலியின் அசத்தலான அறிமுகம், பிங்கலதேவனின் வில்லத்தனம், தேவசேனையின் அறிமுகம், கள்வர்களுடனான சண்டை, இயற்கைச் செறிவாய்ப் பூத்துக் குலுங்கும் குந்தல தேசம், தேவசேனை மீதான பாகுபலியின் காதல், கட்டப்பாவின் நகைச்சுவை, பல்வாழ்தேவனி...
காதலைக் கொண்டாடும் தோழா

காதலைக் கொண்டாடும் தோழா

சினிமா, திரைத் துளி
இரண்டு ஆண்களுக்கிடையே நிலவும் ஆத்மார்த்தமான நெருக்கத்தையும் நேசத்தையும் சித்தரிக்கும் படம் தோழா. மாற்றுத்திறனாளியாக நடிக்கும் நாகர்ஜுனாவின் பன்முக திறமையை இப்படம் வெளிபடுத்தும். இது அவரது வாழ்நாளில் நடிக்கும் சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றாகக் கண்டிப்பாக அமையும். படத்தில், அவரது உற்றத் தோழனாக கார்த்தி வாழ்ந்துள்ளார். கதாநாயாகியாக தமன்னா நடிக்கிறார். படப்பிடிப்பு முடிந்து, இப்படம் இந்த ஆண்டு மார்ச்சில் படம் வெளிவர உள்ளது. வாழ்வைக் கொண்டாடும் இப்படம், இரண்டு நண்பர்களுக்கிடையேயான உணர்ச்சிகரமான பயணத்தைச் சொல்கிறது. பிரகாஷ் ராஜ், விவேக், மறைந்து விட்ட குணசித்திர நடிகை கல்பனா போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளனர். பிரான்ஸ், பல்கேரியா, ஸ்லோவேனியா போன்ற நாடுகளிலும், இந்தியாவிலும் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். இதுவரை திரையில் கண்டிராத புதிய இடங்களில் எல்லாம் ஒளிப்பதிவு செய்துள்ளார் P.S.வினோத். படத்த...