சென்னை மாலில் “ஸ்குவாஷ்” போட்டிகள்
19வது ஆசிய ஸ்குவாஷ் சேம்பியன்ஷிப் போட்டி, மூன்றாம் முறையாகச் சென்னையில் நிகழ்கிறது. இப்போட்டியை, ஸ்குவாஷ் ரேக்கட்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் ஏஷியன் ஸ்குவாஷ் ஃபெடரேஷனுடன் இணைந்து, தமிழ்நாடு ஸ்குவாஷ் ரேக்கட்ஸ் அசோசியேஷன் நடத்துகிறது. இதற்கு முன்னர், இப்போட்டி 2002இலும், 2010இலும் சென்னையில் நடந்துள்ளது.
ஸ்குவாஷ் போட்டியை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும், ஸ்குவாஷைப் பிரபலப்படுத்தவும், ஆசிய ஸ்குவாஷ் சேம்பியன்ஷிப் போட்டியைச் சென்னை ராயப்பேட்டையிலுள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடத்துகின்றனர். இன்று முதல் 30 ஆம் தேதி வரை 5 நாட்கள் போட்டிகள் நடக்கவுள்ளன. ஏற்கெனவே, 2011 இனாகரல் உலகக் கோப்பையையும், 2012 U-21 உலகக் கோப்பையையும் எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்பொழுது மக்கள் மத்தியில் கிடைத்த ஆரவார வரவேற்பினை மனதில் கொண்டே, மதிய வேளையில் காலிறுதிப் போட்ட...