தரமற்ற படம் தரமணி – ஏன்? எப்படி?
தரமணி படத்திற்குத் திரைக்கதை எழுத இன்ஸ்பையரான இரண்டு விஷயங்களைப் பற்றி ராம் பகிர்ந்து கொள்கிறார்.
<< 1. ஜூனியர் விகடனில் வந்த ஒரு கட்டுரை. வெளிநாட்டில் கணவன் வாழ்கிறான்; இங்கே அவன் வீட்டில் ஒரு லேண்ட் லைன் ஃபோன் வாங்குகிறார்கள். செல்ஃபோன் பரவலான உபயோகத்திற்கு வந்திராத சமயம் அது. ஃபோன் பில் ஒரு லட்சத்தைத் தாண்டுகிறது. இவ்விஷயம் பிரச்சனை ஆகிறது. கால் லிஸ்ட் எடுத்துப் பார்க்கப்படுகிறது. ஒரு நம்பருக்கு அதிகமாக அழைப்புப் போய் வந்துள்ளது. "அவன் யாரெனத் தெரியாது. நன்றாகப் பேசினான். நானும் பேசினேன்" என்கிறாள் அம்மனைவி. >>
படத்தில் இதைத் தழுவி காட்சிகளை வைத்துள்ளார் ராம். இந்த ஒரு சம்பவத்தைக் கொண்டு பொதுமைப்படுத்துவதே அபத்தமான விஷயம். ராம் ஒரு படி மேலே போய் தன் வக்கிரத்தைக் காட்சிகளாக வைத்துள்ளார். எப்படியெனில், அந்நியோன்யமாக இருப்பதாகத் தொடக்கத்தில் இருந்து காட்டப்படுபவர்கள் வீனஸ் - ...