Shadow

Tag: Telugu Film Directors Association

மே 4 – இயக்குநர்கள் தினம் கொண்டாட்டம்

மே 4 – இயக்குநர்கள் தினம் கொண்டாட்டம்

அயல் சினிமா
உலகிலேயே அதிக திரைப்படங்களை இயக்கி உலக சாதனை படைத்த பெருமைமிகு தெலுங்கு இயக்குநர் தாசரி நாராயண ராவ் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், மே 4 ஆம் தேதியை "இயக்குநர்கள் தின”மாக அறிவித்து, தெலுங்கு இயக்குநர்கள் கடந்த ஐந்து வருடமாகக் கொண்டாடிவருகின்றனர். தெலுங்கு இயக்குநர்கள் சங்கத்திற்கு நலநிதி வழங்குவதே முக்கிய நோக்கம் என்றும், இந்த ஆண்டு “இயக்குநர்கள் தின” விழாவை வரலாறு காணாத வகையில் நடத்தவுள்ளதாகவும் தெலுங்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் பா. வீர சங்கர் தெரிவித்தார். ஹைதராபாத்தில் உள்ள லால் பகதூர் மைதானத்தில், தெலுங்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் சாய் ராஜேஷ், திங்கள்கிழமை மாலை நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் (திரையை உயர்த்தும் நிகழ்வு) விழாவின் விவரங்களை வெளியிட்டார். மேலும், மற்றொரு துணைத் தலைவர் வசிஷ்டா, இந்த ஆண்டு வெளியான புதுமுக இயக்குநர்களின் ...