Shadow

Tag: The Mummy

தி மம்மி விமர்சனம்

தி மம்மி விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
மம்மி படத்தில் டாம் க்ரூஸ் நடிக்கிறார் என்ற செய்தி, ரசிகர்கள் மத்தியில் பலமான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. ரகசிய தீவிரவாத சிண்டிகேட்களை வேரறுக்கும் டாம் க்ரூஸ் எகிப்தியக் கல்லறைக்கு என்ன வேலையாகப் போயிருப்பார் என்ற ஆவலே அதற்குக் காரணம். ஈராக்கில் (மெசொப்பொதாமியா), எதிர்பாராத விதமாய்ப் புராதனமான கல்லறை (சிறை) ஒன்றைக் கண்டுபிடிக்கிறார் நிக் மோர்டன். அந்தப் பாதாளச் சிறையில் புதைக்கப்பட்டிருக்கும் எகிப்திய இளவரசி அஹமனெத்தின் கல்லறைப் பெட்டி பாதரசத்திலிருந்து எடுக்கப்பட்டதும், பாலைவனப் புயல்களைக் கட்டுப்படுத்தும் இருள் கடவுளான செத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீண்டும் நிறைவேற்றிக் கொள்ள காய்களை நகர்த்தத் தொடங்கி விடுகிறார் அஹமனெத். இளவரசியால் பீடிக்கப்படும் நிக் மார்டனின் கதியென்ன ஆனது என்றும், கடவுள் செத்துடன் இளவரசி செய்து கொண்ட ஒப்பந்தம் என்னானது என்பதும் தான் படத்தின் கதை. 1999இல், ப...
டாம் க்ரூஸின் ‘தி மம்மி’

டாம் க்ரூஸின் ‘தி மம்மி’

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
1999ஆம் ஆண்டு, இதே தயாரிப்பு நிறுவனம் உருவாக்கிய படம்தான், ‘தி மம்மி’. 2001இல், ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ் (The Mummy Returns)’ என்கிற இரண்டாம் பாகமும் வெளியாகி உலகெங்கிலும் பெரியதொரு பரபரப்பை உருவாக்கியது. அவ்விரு படங்களுமே உலக அளவில் மிகப் பெரிய வசூலை வாரிக் கொட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த இரண்டு படங்களையுமே ஸ்டீஃபன் சோமோர்ஸ் இயக்கியிருந்தார். சற்று இடைவெளிக்குப் பிறகு 2008இல், ‘தி மம்மி: டூம்ப் ஆஃப் தி ட்ராகன் எம்பரர்’ வெளியாகி, அப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது. ராப் கோஹன் அம்மூன்றாம் பாகத்தை இயக்கியிருந்தார். இம்மூன்று தொடர் படங்களைத் தவிர கிளைத் திரைப்படங்களாக ‘தி ஸ்கார்பியான் கிங் (The Scorpion King)’ போன்றவையும் வெளியாகின. இரண்டு காமிக் கதைப் புத்தகங்களும் கூட ‘மம்மி’ கதைக்கருவை மைய்யமாக வைத்து உருவாக்கப்பட்டன. கிட்டதிட்ட பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், அலெக்ஸ் கர்ஸ்மெனின் நேர...