Shadow

டாம் க்ரூஸின் ‘தி மம்மி’

the-mummy-movie-review

1999ஆம் ஆண்டு, இதே தயாரிப்பு நிறுவனம் உருவாக்கிய படம்தான், ‘தி மம்மி’. 2001இல், ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ் (The Mummy Returns)’ என்கிற இரண்டாம் பாகமும் வெளியாகி உலகெங்கிலும் பெரியதொரு பரபரப்பை உருவாக்கியது. அவ்விரு படங்களுமே உலக அளவில் மிகப் பெரிய வசூலை வாரிக் கொட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த இரண்டு படங்களையுமே ஸ்டீஃபன் சோமோர்ஸ் இயக்கியிருந்தார்.

சற்று இடைவெளிக்குப் பிறகு 2008இல், ‘தி மம்மி: டூம்ப் ஆஃப் தி ட்ராகன் எம்பரர்’ வெளியாகி, அப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது. ராப் கோஹன் அம்மூன்றாம் பாகத்தை இயக்கியிருந்தார். இம்மூன்று தொடர் படங்களைத் தவிர கிளைத் திரைப்படங்களாக ‘தி ஸ்கார்பியான் கிங் (The Scorpion King)’ போன்றவையும் வெளியாகின. இரண்டு காமிக் கதைப் புத்தகங்களும் கூட ‘மம்மி’ கதைக்கருவை மைய்யமாக வைத்து உருவாக்கப்பட்டன.

கிட்டதிட்ட பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், அலெக்ஸ் கர்ஸ்மெனின் நேர்த்தியான இயக்கத்தில், டாம் க்ரூஸ் (Tom Cruise) பிரதான வேடத்தில் தோன்ற, சோஃபியா பெளடெல்லா மம்மியாக நடித்திட, உருவாக்கப்பட்டுள்ள மிகப் பிரம்மாண்டமான படம் தான், ‘தி மம்மி (2017)’.

ரஸல் க்ரோ (Russel Crowe), டாக்டர் ஹென்றி ஜெக்கில் என்கிற ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரசெல் ஏற்று நடித்துள்ள வேடத்தில் டாம் ஹார்டி, எடி ரெட்மெய்ன் போன்ற பிரபல நடிகர்கள் நடிப்பதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏறக்குறைய 125 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், 107 நிமிடங்கள் ஓட்ட நேரம் கொண்டது.

ப்ரயான் டெய்லர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பென் செரிசென் படத்தின் ஒளிப்பதிவினைக் கையாண்டுள்ளார். 2D மற்றும் 3D வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், தமிழ்ப் பதிப்பாக 140 பிரின்ட்களும், ஆங்கிலப் பதிப்பாக 20 பிரின்ட்களும் தயார் செய்யப்பட்டுள்ளன.

ஹன்ஸா பிக்சர்ஸ் நிறுவனத்தின் வெளியீடு இப்படம்.