Shadow

Tag: The Secret Life of Pets 2 movie review

தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் 2 விமர்சனம்

தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் 2 விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள், அதனை வளர்க்கும் உரிமையாளர்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் என்ன செய்யும் என்ற முதல் பாகத்தின் கதைதான், கலகலப்பான இரண்டாம் பாகத்தின் கதையும். மேக்ஸ், ட்யூக், கிட்ஜெட், ஸ்னோ பால் என தி சேக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் படத்தில் வந்த பிரதான கதாபாத்திரங்கள் அப்படியே வருகின்றன. மேக்ஸையும், ட்யூக்கையும் வளர்க்கும் கேட்டிக்குக் கல்யாணமாகி, லியாம் எனும் குழந்தையும் பிறக்கிறது. கைக்குழந்தையான லியாமிடம் மேக்ஸ் படும்பாடு கொஞ்சம் நஞ்சமில்லை. பின், லியாம் கொஞ்சம் வளர்ந்ததும், அவர்களுக்குள் பிரிக்கவியலாப் பந்தம் உருவாகிறது. குழந்தைகளுக்கும், செல்லப்பிராணிகளுக்குமான உறவு மிகவும் அலாதியானவை. படம் முடிந்ததும், சில அழகான லைவ் ஃபூட்டேஜையும் போட்டு அசத்துகின்றனர். படத்தில் மொத்தம் மூன்று கிளைக்கதைகள். கேட்டி தனது குடும்பத்தோடு ஒரு பண்ணை வீட்டுக்குச் சுற்றுலா போக, பயந்தாங்க...