Shadow

Tag: The Woman King

தி வுமன் கிங் – அகோஜி படையின் வீர தீர சாகசம்

தி வுமன் கிங் – அகோஜி படையின் வீர தீர சாகசம்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
சரித்திர புகழ் மிக்க சாகச போர் காவியங்களைத் திரையில் வடிப்பதென்பது ஒரு சாமான்ய செயற்பாடன்று. இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உதாரணமாகச் சொல்லலாம். அந்த வகையில், ஆஃப்ரிக்க தேசமான தகோமாவில் (Dahomey) 1800 களில், அந்தத் தேசத்தைக் காக்க, முழுவதும் பெண்களே பங்குகொண்ட அகோஜி (Agojie) என பேர் கொண்ட ஒரு படையின் வீர தீர செயல்பாடுகளை ஒரு காவியமாகத் திரையில் கொண்டு வந்துள்ளனர். உயரிய உடை அலங்காரங்கள், பிரம்மாண்டமான காட்சியமைப்புகள், அசர வைக்கும் போர் காட்சிகள் என அதிக பொருட்செலவில் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் ‘தி வுமன் கிங்’ படத்தைப் பரபரப்பாக உருவாகியுள்ளனர். ஆராய்ச்சியின் அடிப்படையில், இவ்வாண்டில் A+ Cinema Score கௌரவத்தைப் பெற்ற இரு படங்களில் இதுவும் ஒன்று. இயக்கம் முதல் இதர தொழில்நுட்பக் கலைகள் வரை அதிகபட்சமாகப் பெண்களே பங்குபெறும் ஓர் உன்னதமான தற்காப்பு போர்க் காவியமிது. Vio...