Shadow

Tag: Thirumazhisai Alvar

திருமழிசை ஆழ்வார் – நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே

திருமழிசை ஆழ்வார் – நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே

ஆன்‌மிகம், இது புதிது
நீ எனக்குள் தான் இருக்கிறாய் என்று அறிந்த பின், என் மனதுக்குள் என்றும் நீங்காமல் நின்றும் அமர்ந்தும் கிடந்தும் அருளுகின்றாய் முன்பொரு காலத்தில் திருமழிசையில், ஒரு முனிவர் தம்பதிக்குக் குழந்தை ஒன்று பிறந்தது. அந்தக் குழந்தையின் கைகளும் கால்களும் அசைவற்ற நிலையில் இருந்ததால் அக்குழந்தையை ஒரு பொது இடத்தில் அக்குழந்தையின் பெற்றோர் அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். அவ்வழியே வந்த கூடை செய்து விற்றுப் பிழைக்கும் தம்பதி, இந்தக் குழந்தையை ஆசையாக எடுத்தனர். அக்குழந்தையின் கை கால்கள் நன்கு அசைந்தது. இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லாததால், இக்குழந்தையையே தமது குழந்தையாக எண்ணி வளர்த்து வந்தனர். அடுத்த சில வருடங்களில் கூடை பின்னும் தம்பதிக்குக் குழந்தை பிறந்தது. அவர்களின் குழந்தைக்குக் "கனிக்கண்ணன்" என்று பெயரிட்டு வளர்த்தனர். இவர்களின் வளர்ப்புக் குழந்தை பின்னாளில் ஞானமும் பக்தியும் நிரம்பிய த...