ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்: ஏன் போர்ஸ்சி 911 கார்?
ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரைஸ் ஆஃப் தி பீஸ்ட்ஸ் பட இயக்குநர் ஸ்டீவன் கேப்பல் ஜூனியரைப் பெரு நாட்டில் படப்பிடிப்பின் போது சந்தித்து, ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் படத்தொடரின் முந்தைய இயக்குநரும், இப்படத்தின் தயாரிப்பாளருமான மைக்கேல் பே, ஒரு முக்கியமான அறிவுரையை வழங்கியுள்ளார்.
“ரோபோட்களின் எண்ணிக்கையை அதிகமாக்காதே! ஏனெனில் ரோபாட்களின் எண்ணிக்கை அதிகமானால் சமாளிக்க முடியாது. ரசிகர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் ரோபோட்களின் மீது கவனம் செலுத்துமாறு சொன்னார் மைக்கேல் பே” என்றார் இயக்குநர் ஸ்டீவன் கேப்பல் ஜூனியர். அப்படியும், புலி வடிவில் வரும் மேக்ஸிமல்ஸ் என்ன மாதிரியான ஸ்டன்ட்டில் ஈடுபட்டது என்ற குழப்பம் எழாமலில்லை.
‘ரைஸ் ஆஃப் தி பீஸ்ட்ஸ்’ படத்தில் வரும் அசத்தலான ஆட்டோபாட்டான மைரேஜை, முதலில் ஃபெராரி காராக வடிவமைக்கும் யோசனை இருந்தாகச் சொல்கிறார் தயாரிப்பாளர் மார்க் வஹ்ராடியன். பிறகு லம்போர்கினியாக வடி...