Shadow

ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்: ஏன் போர்ஸ்சி 911 கார்?

ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரைஸ் ஆஃப் தி பீஸ்ட்ஸ் பட இயக்குநர் ஸ்டீவன் கேப்பல் ஜூனியரைப் பெரு நாட்டில் படப்பிடிப்பின் போது சந்தித்து, ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் படத்தொடரின் முந்தைய இயக்குநரும், இப்படத்தின் தயாரிப்பாளருமான மைக்கேல் பே, ஒரு முக்கியமான அறிவுரையை வழங்கியுள்ளார்.

“ரோபோட்களின் எண்ணிக்கையை அதிகமாக்காதே! ஏனெனில் ரோபாட்களின் எண்ணிக்கை அதிகமானால் சமாளிக்க முடியாது. ரசிகர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் ரோபோட்களின் மீது கவனம் செலுத்துமாறு சொன்னார் மைக்கேல் பே” என்றார் இயக்குநர் ஸ்டீவன் கேப்பல் ஜூனியர். அப்படியும், புலி வடிவில் வரும் மேக்ஸிமல்ஸ் என்ன மாதிரியான ஸ்டன்ட்டில் ஈடுபட்டது என்ற குழப்பம் எழாமலில்லை.

‘ரைஸ் ஆஃப் தி பீஸ்ட்ஸ்’ படத்தில் வரும் அசத்தலான ஆட்டோபாட்டான மைரேஜை, முதலில் ஃபெராரி காராக வடிவமைக்கும் யோசனை இருந்தாகச் சொல்கிறார் தயாரிப்பாளர் மார்க் வஹ்ராடியன். பிறகு லம்போர்கினியாக வடிவமைக்கலாம் எனப் பேச்சு வார்த்தை நடந்துள்ளது. கடைசியாக போர்ஸ்சி 911 (Porsche 911) கார் என ஏக மனதாக முடிவு செய்துள்ளது படக்குழு. அதற்கு இரண்டு காரணங்களை முன் வைக்கின்றனர்.

ஒன்று, போர்ஸ்சி 911 காரின் வட்டமான வளைவுகளைக் கொண்ட அசத்தலான வடிவமைப்பு, அக்கார் ரோபோவாக மாறும் பொழுது பார்க்க மிகச் சிறப்பான விஷுவலாக இருக்கும். இன்னொன்று, மைக்கேல் பே இயக்கிய ‘பேட் பாய்ஸ்’ படத்தில் வில் ஸ்மித் போர்ஸ்சி கார் தான் உபயோகிப்பார். “பேட் பாய்ஸ் படத்தில் வில் ஸ்மித் ஓட்டியதால்தான் போர்ஸ்சி கார் எநக்கு அறிமுகமானது. எவ்ளோ கூலான காரை ஓட்டுகிறார் என நான் வியந்து பார்த்தேன். இந்தக் காரைப் பயன்படுத்துவது மைக்கேல் பே-க்குச் செய்யும் மரியாதையாக இருக்கும் என நம்பினேன்” என இரண்டாவது காரணத்தைச் சொல்கிறார் இயக்குநர் ஸ்டீவென் கேப்பல் ஜூனியர்.