Shadow

Tag: Uriyadi 2 movie

உறியடி 2 விமர்சனம்

உறியடி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2016 இல் வெளியான உறியடி மிக ஃப்ரெஷான அரசியல் படமாக ரசிகர்களைக் கவர்ந்தது. பிரித்தாளும் அரசியல்வாதிகள் Vs ஒற்றுமையான மாணவர்கள் என்பதாகப் படம் மறக்கவியலாததொரு அனுபவத்தை அளித்தது. இப்படமும் அப்படியே மனதில் தங்கும். போபால் விஷ வாயு கசிவைக் கண் முன் கொண்டு வந்து மிகப் பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளார். மக்களின் உயிரை மயிறுக்குச் சமானமாக நினைக்கும் கொழுத்த தொழிலதிபர்தான் படத்தின் வில்லன். மக்கள் ஏன் ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் போராடுகின்றனர், மக்களுக்கான அரசாங்கம் எப்படி தொழிலதிபருக்காகச் சேவகம் செய்கிறது என்ற குரூரமான யதார்த்தத்தையும் படம் சித்தரிக்கிறது. படம் தொட்டுள்ள களத்தின் தீவிரம் தாங்கமுடியாததாய் உள்ளது. ஆனால், முதற்பாகம் போல் திரைக்கதை அவ்வளவு இன்டென்சாக இல்லை. காரணம், முதற்படத்தில் விஷத்தைக் கக்கும் அரசியல்வாதிகள், கண்ணுக்குத் தெரியாமல் நம் அருகிலேயே உள்ளவர்களாக இருந...
உறியடி 2 – மனதைத் தொந்தரவு செய்யும்

உறியடி 2 – மனதைத் தொந்தரவு செய்யும்

சினிமா, திரைச் செய்தி
2டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில், சாவனீர் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் ‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா பேசுகையில், “இந்த படம் ரசிகர்களைத் திருப்திப்படுத்தாது. ஆனால் அவர்களின் உறக்கத்தைக் கெடுக்கும். அதுபோன்ற வீரியமுள்ள படைப்பு இது” என்றார். படத்தின் இயக்குநர் விஜய் குமார் பேசுகையில், “இசையமைப்பாளரைத் தேர்வு செய்யும் முன் ஒரு மூன்று விஷயங்களை மனதில் கொள்வோம். ஈகோ இருக்கக் கூடாது; திறமை இருக்க வேண்டும்; டெடிகேஷன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம். இந்த மூன்றும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவிடம் இருந்தது. இந்தப் படத்தில் மூன்று பாடல்கள் மற்றும் ஒரு செய்யுள் இசையமைத்திருக்கிறார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஜேனரில் இருக்கும். முதன்முறையாக இந்தப் படத்தில் இரண்டு பாடல்களைக் கோவிந...
உறியடி 2 – புரையோடிய சாதி அரசியலுக்குத் தீர்வு

உறியடி 2 – புரையோடிய சாதி அரசியலுக்குத் தீர்வு

சினிமா, திரைத் துளி
‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பது போல இளம் இயக்குநர் விஜய்குமார் இயக்கி நடித்த உறியடி திரைப்படம் சிறிய பட்ஜெட்டில் வந்திருந்தாலும் தமிழ்சினிமாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உறியடியில் பேசிய சாதி அரசியலை இன்னும் வலிமையாக பேச உள்ளது உறியடி 2. சூர்யா தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கி நடித்திருக்கும் விஜய்குமார், "உறியடி, உறியடி 2 எடுப்பதற்கான காரணம் என்ன?" என்பதற்கு அழகான ஆழமான பதிலைச் சொல்லி இருக்கிறார். "இப்போது உள்ள சமூகத்திற்கு சாதிப்பிரிவினை தான் பெரும் பிரச்சனை. அதுதான் உறியடி, உறியடி 2 வருவதற்கான காரணம்" என்கிறார். மேலும், "எனக்குக் கம்யூனிசச் சிந்தனையோ, புத்தகம் படிக்கிற பழக்கமோ இல்லை. எனக்கு ரொம்பப் பிடிச்சது சினிமா. அதை ஆத்மார்த்தமா கொடுக்கிறது தான் என் திறமைக்கு நான் கொடுக்குற மரியாதை. களத்துல இறங்கி மக்களுக்காக நான் எதுவும் செய்யல. ஆனா, மக்களைச் சுலபமா அணுகு...