Shadow

Tag: Vedaa thirai vimarsanam

வேதா விமர்சனம்

வேதா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
"சூத்திரர்கள் ஏன் காலில் உருவானார்கள்?" - கல்லூரி மாணவி வேதா. "அதான் பெரியய்யா சொன்னாரே! அதெல்லாம் சொர்க்கத்துல நிச்சயிக்கப்பட்டதுன்னு" - வேதாவின் அக்கா. "அப்புறம் ஏன் சட்டத்தைச் சொல்லித் தர்றாங்க? சமத்துவம்னு பேசுறாங்க?" ஆயிரம் ஏக்கருக்குச் சொந்தக்காரரும், நூற்றைம்பது கிராமங்களுக்குத் தலைவருமான பெரியய்யா என்றழைக்கப்படும் ஜிதேந்தர் பிரதாப் சிங் ஒரு மாமன்னன் போல் வலம் வருகிறார். எல்லாருக்கும் எல்லா வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும், அனைவரும் முன்னேற வேண்டும், ஆனால் மற்ற சமூகத்தினரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்ற எண்ணமுடையவர். அதாவது கலப்புத் திருமணத்திற்கு எதிரானவர். வேதாவின் அண்ணன் மேல் சாதிப்பெண்ணைக் காதலித்து விட, பிரச்சனை பெரியய்யாவிடம் போகிறது. அசிங்கப்படுத்தி மிரட்டி அனுப்புகிறார், வேதாவின் அண்ணனோ காதலியுடன் வெளியேறிவிடுகிறார். கல்யாணம் செய்து வைக்கிறேன் என வரவழைத்து, வேதாவின் அக்காவ...