
வீரையன் விமர்சனம்
வீரையன் என்பவர் தஞ்சாவூர் மாவட்டத்தின் காவல் தெய்வங்களில் ஒருவர். சிறு தெய்வங்கள், குறிப்பாகத் தமிழகத்தின் காவல் தெய்வங்கள் எல்லாம் மனிதர்களாக வாழ்ந்து தனது தியாகத்தாலோ, வீரத்தாலோ அந்தப் பகுதி மக்களின் அன்பையும் மரியாதையுக் சம்பாதித்திருப்பார்கள். அப்படி, தொழில்நுட்பத் தொடர்பு சாதனங்கள் புகுந்து மக்களின் அன்றாட வாழ்வைப் பாதித்திராத1989 ஆம் ஆண்டில், தஞ்சாவூரில் வாழ்ந்த மிகச் சாதாரண மனிதன் எப்படித் தன் தியாகத்தால் வீரையன் ஆகிறான் என்பதுதான் படத்தின் கதை.
படத்தில் மூன்று கதைகள் ஒன்றோடு ஒன்று பிணைந்து வருகின்றன. இந்தப் படத்தில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் நல்லவர்கள். சூழ்நிலைகள் பாதகமாய் அமைகிறது. வீரையனாக ‘ஆடுகளம்’ நரேன் நடித்துள்ளார். பொறுப்பான நல்ல தந்தை கதாபாத்திரத்திற்கு ஏற்றவர் என முடிசூட்டிக்கொண்டிருக்கும் ஜெயப்ரகாஷ்க்கு மிகச் சிறந்த போட்டியாகப் பரிணமித்து வருகிறார். படத்தின் தலை...