Shadow

Tag: VeeraVanakkam movie

வீரவணக்கம் விமர்சனம் | Veeravanakkam review

வீரவணக்கம் விமர்சனம் | Veeravanakkam review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
"வசந்தத்திண்டே கனல் வழிகளில்" என்று மலையாளத்தில், 2014 ஆம் ஆண்டு வந்த படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்து வீர வணக்கமாக வெளியிட்டுள்ளனர்.நீதி மறுக்கப்பட்டவனுக்கு இரக்கம் காட்டுபவன்தான் உண்மையான கம்யூனிஸ்ட் - P.கிருஷ்ண பிள்ளை கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய முதல் செயலாளரும், புரட்சி வீரருமான P.கிருஷ்ண பிள்ளையின் (1906 – 1948) சரிதத்தை ஒட்டி, இப்படம் இயற்றப்பட்டுள்ளது. E.M.S.நம்பூதிரிபாட், A.K.கோபாலன் ஆகியோரும் P.கிருஷ்ண பிள்ளை தொடங்கும் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்குகின்றனர். இப்படம் நிகழும் காலகட்டம் 1940 முதல் 1946 வரையாகும். சிறையில் இருந்தவாறே, தங்கம்மாவைக் காதலித்து மணம் புரிகிறார் P.கிருஷ்ண பிள்ளை. சாதி ஒடுக்குமுறை உச்சத்தைத் தொடும் ஒரு கிராமத்திற்குச் சென்று, மக்களை ஒருங்கிணைத்து அவர்களது உரிமையை மீட்கப் போராடுவதுதான் படத்தின் கதை. இக்கதையை மக்களுக்கு நினைவூட்டி, அனைத...
வீரவணக்கம் | தமிழக – கேரளத்தின் சகோதரத்துவத்தைச் சொல்லும் படம்

வீரவணக்கம் | தமிழக – கேரளத்தின் சகோதரத்துவத்தைச் சொல்லும் படம்

சினிமா, திரைத் துளி
பிரபல நடிகர்கள் சமுத்திரக்கனியும் பரத்தும் முதல் முறையாக இணையும் தமிழ்நாடு - கேரளாவின் சகோதரத்துவத்தையும், இதய உறவுகளையும் உறுதிப்படுத்தும் ஒரு அபூர்வ திரைப்படம் 'வீரவணக்கம்' ஆகும். பிரபல மலையாளத் திரைப்பட இயக்குநர் அனில் வி. நாகேந்திரன் எழுதி இயக்கியுள்ள வீரவணக்கத்தில், சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற சுரபி லட்சுமி, ரித்தேஷ், பரணி, ரமேஷ் பிஷாரடி, சித்திக், அரிஸ்டோ சுரேஷ், ஆதர்ஷ், அய்ஸ்விகா, சித்தாங்கனா மற்றும் 2000 க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். பிரபல புரட்சிப் பாடகியும் கேரள மக்களால் போற்றப்படும் சுதந்திரப் போராட்ட வீராங்கனையுமான 95 வயதான பி.கே. மேதினி அம்மாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய முதல் செயலாளரும், புரட்சி வீரருமான பி. கிருஷ்ண பிள்ளை அவர்களின் வீர வாழ்க்கை வரலாறும் பெரியாரின் வாழ்க்கைத் தத்துவங்களும் இணைந்த இந்தப் புதுமை...