
வேலுபிரபாகரனின் காதல் கதை விமர்சனம்
"வேலுபிரபாகரனின் காதல் கதை" என்ற பெயரைப் பார்த்தவுடன் வேலுபிரபாகரன் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் 'காதல் கதை' என்று நினைத்தால் அது தவறு என்பது படம் பார்த்தவுடன் புரிந்து விடும். படத்தின் முழு பெயரே 'வேலுபிரபாகரனின் காதல் கதை' தான்.
படத்தில் வேலுபிரபாகரன் ஒரு இயக்குனராகவே வருகிறார். அவர் எடுக்கும் படம் சர்ச்சைக்குள்ளாகி, அந்தப் படத்தை தடை செய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு போடப்படுகிறது. ஆட்டோவில் வந்து கொண்டிருக்கும் வேலுபிராகரனைக் குண்டர்கள் சிலர் வழி மறித்து கத்தியால் குத்தி விடுகின்றனர். வேலுபிராபகரனைப் பற்றி அவருக்கு கடைசியாக ஃபோன் செய்த பெண் பத்திரிகை நிருபரை அழைத்து விசாரிக்கின்றனர். பெண் நிருபர் வேலுபிராபகரனின் சர்ச்சைக்குரிய கதையையும், அவரது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட காதலையும் பற்றி காவல் துறையினருக்குச் சொல்கிறார்.
'விஷ்ணுபுரம்' என்ற ஊரில் அவர் பார்த்த உண்மைச் சம்பவங்கள் ...


