“கண்டிப்பா பயப்படுவீங்க” – ‘அவள்’ சித்தார்த்
சித்தார்த்தின் சினிமா மீதான காதல் தான் அவரை ஏடாகி எண்டர்டெயின்மென்ட் எனும் சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கச் செய்தது. முதல் தயாரிப்பான ஜில் ஜங் ஜக் படத்திலேயே, முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைக்களத்தைத் தொட்டுச் சோதனை முயற்சி செய்தார். அத்தகைய தைரியமான முயற்சி தான், நவம்பர் 3 வெளியாகவுள்ள "அவள்" திரைப்படமும்! இப்பட இயக்குநர் மிலிண்ட் ராவுடன் சேர்ந்து இப்படத்தில் எழுத்தாளராகவும் சித்தார்த் பணியாற்றியுள்ளார். 'வயாகாம் மோஷன் பிக்சர்ஸ்' நிறுவனத்தோடு இணைந்து இப்படத்தை சித்தார்த் தயாரித்துள்ளார்.
விக்ரம் வேதா போன்ற பல வெற்றி படங்களை ரிலீஸ் செய்து தனக்கெனப் பெரும் பெயரையும் மதிப்பையும் சம்பாதித்திருக்கும் 'ட்ரைடென்ட் ஆர்ட்ஸ்' ரவீந்திரன் அவர்கள் 'அவள்' படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடவுள்ளார்.
'அவள்' குறித்து சித்தார்த் பேசுகையில், ''திகில் படங்களின் தீவிர ரசிகனான எனக்கு இந்திய சினிமாவில் நம்மை உண்...