Shadow

Tag: Vijay Antony film Corporation

சக்தித் திருமகன் | விஜய் ஆண்டனியின் 25 ஆவது படம்

சக்தித் திருமகன் | விஜய் ஆண்டனியின் 25 ஆவது படம்

இது புதிது, சினிமா, திரைத் துளி
விஜய் ஆண்டனி நடிப்பில் 25 ஆவது திரைப்படமாக வெளியாக இருக்கும் ‘சக்தித் திருகன்’ எனும் படம், மாஸ் ஆக்‌ஷன் ஃபேமிலி என்டர்டெய்னராக இருக்கும் என்று படக்குழு உறுதியளித்துள்ளனர். இயக்குநர் அருண் பிரபு இப்படத்தை இயக்கவிருக்கிறார். இவரது முந்தைய படங்களான அருவி மற்றும் ‘வாழ்‘ ஆகும். அவரது மூன்றாவது படமான ‘சக்தித் திருமகன்’ ஆழமான கதையுடன் கூடிய ஆக்‌ஷன் மாஸ் படமாக உருவாகவுள்ளது. படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் தயாரிக்க, மீரா விஜய் ஆண்டனி வழங்குகிறார்.விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் வாகை சந்திரசேகர், சுனில் கிரிப்லானி, செல் முருகன், த்ருப்தி ரவீந்திரன் மற்றும் குழந்தை நடிகர் மாஸ்டர் கேசவ் ஆகிய திறமையான நடிகர்கள் குழு உடன் நடிக்கவிருக்கிறார்கள். தொழில்நுட்பக் கலைஞர்கள்:-எழுத்து இயக்கம் - அருண் பிரபு ஒளிப்பதிவு - ஷெல்லி காலிஸ்ட் இசை - விஜய் ஆண்டனி படத்தொகுப்பு - ரேமண்ட் ...
ரோமியோ விமர்சனம்

ரோமியோ விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
முதல் நாளே விவாகரத்து கேட்கும் மனைவியை, ஆறு மாதத்திற்குள் காதலித்து 'கரெக்ட்' செய்து விட நினைக்கிறார் நாயகன். மனைவியின் மனதை வென்றாரா இல்லையா என்பதே படத்தின் கதை. ‘தி லவ் பார் (TLB)’-இல் மேனேஜராகப் பணிபுரிகிறார் யோகி பாபு. விஜய் ஆண்டனி ரோமியோவாக மாற ஆலோசனை சொல்லும் பாத்திரத்தை நிறைவாகச் செய்திருந்தாலும், நகைச்சுவைக்குப் பெரிய பங்களிப்பு அளிக்கவில்லை. நடிகையாக வேண்டும் என்ற கனவை மட்டுமே சுமக்கும் பாத்திரத்தில் மிர்னாலினி ரவி நடித்துள்ளார். தன் நடிப்புத்திறமையின் மீது நம்பிக்கையாக இருப்பதை விட, ஃபோனில் வரும் அநாமதேய அழைப்பின் பாசிட்டிவ் வார்த்தைகளைப் பெரிதும் நம்பியுள்ளார். இப்படி ஏனோதானோவென்று இல்லாமல், நாயகியின் கதாபாத்திர வார்ப்பில் கவனம் செலுத்தியிருந்தால் அருமையாக இருந்திருக்கும். இப்படத்தினை விட, மெலிதான கருவாக இருந்தாலும், கதாபாத்திர வார்ப்பில் கவனம் செலுத்தியதால் பிரேமலு ரீனா தனித்த...
“ஒரு பெண் எப்படி ஆணைக் கொடுமைப்படுத்துகிறாள்” – விஜய் ஆண்டனி | ரோமியோ

“ஒரு பெண் எப்படி ஆணைக் கொடுமைப்படுத்துகிறாள்” – விஜய் ஆண்டனி | ரோமியோ

சினிமா, திரைச் செய்தி
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் 'ரோமியோ' திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. 'ரோமியோ' திரைப்படம் இந்த வருடம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி இருவரும் 'ரோமியோ' படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி மற்றும் பல திறமையான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நடிகர் தலைவாசல் விஜய், "இந்த பிளாக்பஸ்டர் படத்தில் நானும் ஒரு பங்கு என்பதில் மகிழ்ச்சி. இந்தப் படம் விஜய் ஆண்டனிக்கு நிச்சயம் பெரிய மாற்றம் கொடுக்கும். அந்த அளவுக்கு நல்லவர். பெரிய துன்பத்தைத் தனது மனவலிமையால்...
காளி விமர்சனம்

காளி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு கனவு, அமெரிக்க மருத்துவர் பரத்திற்கு தினம் வருகிறது. தனது கனவிற்கும், தனது சிறு வயது இந்திய வாழ்க்கைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குமென அதைக் கண்டுபிடிக்க, இந்தியா வருகிறார் பரத். அவரது கனவிற்கான புதிருக்கும், கடந்த கால வாழ்க்கை பற்றிய அவரது தேடலுக்கும் விடை கிடைத்ததா என்பதே படத்தின் முடிவு. படத்தின் தொடக்கமே எரிச்சலூட்டுவதாய் அமைகிறது. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்குத் சிறுநீரகம் தரும் டோனர் (Donor), ரத்தச் சம்பந்தமுள்ள உறவாக இருக்கவேண்டுமெனச் சொல்கிறார்கள். என்ன கொடுமை இது? படத்தின் க்ளைமேக்ஸிலும் இது போன்றதொரு லாஜிக்கை அழுத்தமாக வலியுறுத்துவது போல் ஒரு காட்சி வருகிறது. நாயகன் எடுத்து வளர்க்கப்படும் வளர்ப்பு மகன் என அவனது பெற்றோர்கள் நாயகனிடம் சொல்லவும், தாய் சென்ட்டிமென்ட்டிற்காகவும் திணிக்கப்பட்ட அந்தப் பிற்போக்குத்தனமான லாஜிக் மிகக் கொடூரம். முழுக்க முழுக்க அமெரிக்காவில் வளர்ந்...
சைத்தான் விமர்சனம்

சைத்தான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நல்ல கதைகளைத் தேர்ந்தெடுப்பது தான் வெற்றியின் ரகசியம் என்பதில் நம்பிக்கை உள்ளவர் விஜய் ஆண்டனி. அதிலும், சுஜாதாவின் “ஆ” நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி மேலும் எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. அதிலும் எண்ணெய் ஊற்றுவது போல், 10 நிமிட படத்தையும் யூ-ட்யூபில் போட்டு மாஸ் காட்டினார் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனிக்கு காதில் குரல்கள் கேட்கின்றன. தற்கொலை செய்து கொள்ளும்படியும், ஜெயலட்சுமியைக் கொல்லும்படியாகவும் கட்டளை இடுகிறது அக்குரல். இருந்தாற்போல் திடீரென அக்குரல்கள் கேட்கக் காரணம் என்னவென்றும், அது அவரது பூர்வஜென்மத்தைக் கிளறி எப்படி அலைக்கழிக்கிறது என்பதும்தான் படத்தின் கதை. குரல்கள் கேட்பதை ‘ஆ’ நாவலிலிருந்தும், அதற்கான காரணத்தை ‘லூசி’ படத்திலிருந்தும் தழுவி சைத்தானை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. சுஜாதாவின் ‘ஆ’ நாவலினின்று, மிகக் கச்சிதமான முதல் பாதியைத் தந்துள்ளா...