
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தொடரும் விக்ரம் படத்தின் சாதனை
விக்ரம் திரைப்படம், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் ஜூலை 8, 2022 அன்று பிரத்தியேகமாக வெளியானது. வாரயிறுதியில் அதிக பேரால் பார்க்கப்பட்ட படம் என்ற புதிய சாதனையையும் விக்ரம் படம் படைத்துள்ளது. இந்த மெகா ஆக்ஷன் திரைப்படத்திலிருந்து அவர்களுக்குப் பிடித்த தருணங்களை மீண்டும் அனுபவிக்க பார்வையாளர்களுக்குக் கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு இது.
கமல்ஹாசனின் “விக்ரம்” திரைப்படம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுத்து இயக்கத்தில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற கூடுதல் மொழிகளிலும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் திரையிடப்பட்டுள்ளது. இது அந்தந்த மொழி பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கமல்ஹாசனின் அசத்தலான தோற்றம் மற்றும் மனத...