Shadow

Tag: Vikranth Rona movie

விக்ராந்த் ரோணா விமர்சனம்

விக்ராந்த் ரோணா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கும்மிருட்டில் நடக்கும் அமானுஷ்யமான மிஸ்ட்ரி த்ரில்லர் படம். கமரோட்டு எனும் ஊரில் காவல்துறை அதிகாரி இறந்து விட, புது அதிகாரியாக விக்ராந்த் ரோணா வருகிறார். அடுத்தடுத்து 16 குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதன் மர்மத்தைத் துப்பு துலக்குகிறார் விக்ராந்த். படத்தின் முடிவில், முடிச்சுகள் அவிழும் வரையிலுமே ஒரு குழப்பமும், சின்ன அமானுஷ்யமும் நிலுவுகிறது. முப்பரிமாண (3டி) படமாக எடுக்கப்பட்டிருப்பதால், பகல் காட்சிகளும் கூட இருள் படர்ந்ததாகவே தெரிகிறது. படத்திற்கு ஓர் அமானுஷ்யத்தன்மையை அது அளித்தாலும், முழுப் படத்தையும் இருட்டிலேயே பார்க்கும் உணர்வு சலிப்பை ஏற்படுத்துகிறது (9 கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவருக்கு கோளாறான 3டி கண்ணாடி கிடைத்தால் அவரது நிலைமை இன்னும் மோசம்). சுருட்டு பிடித்துக் கொண்டே இருக்கும் கிச்சா சுதீப், அலட்சியமான கம்பீரத்துடன் விசாரணையைத் தொடங்குகிறார். ஆனால், மரணங்கள் தொடர்ந்தவண்ண...