Shadow

Tag: Viruman thirai vimarsanam

விருமன் விமர்சனம்

விருமன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஏழு வருடங்களிற்குப் பிறகு, கார்த்தியுடன் மீண்டும் இணைந்துள்ளார் இயக்குநர் முத்தையா. அடித்து வெளுக்கும் நாயகன், குலச்சாமியாக ஒரு பெண் கதாபாத்திரம், தறிகெட்டு திரியும் வில்லன் என்ற தனது டெம்ப்ளட்டிற்குள் விருமனையும் அடைத்துள்ளார். தனது தாயின் மரணத்திற்குத் தந்தை முனியாண்டி தான் காரணமென்ற எண்ணம், சிறுவன் விருமனின் மனதிலே ஆழமாகப் பதிகிறது. சாகும் முன், விருமனிடம், பணத்தை விட உறவுகள் புடை சூழ வாழ்வதே சிறந்தது என தந்தைக்கு உணர்த்தும்படி ஒரு வேண்டுகோளை வைக்கிறார் அவனது அம்மா முத்துலக்ஷ்மி. சுயநலத்தையும் அகங்காரத்தையும் ஆணவத்தையும் மொத்தமாகக் குத்தகை எடுத்திருக்கும் முனியாண்டியை விருமன் எப்படி தன் வழிக்குக் கொண்டு வருகிறார் என்பதுதான் படத்தின் கதை. இந்தப் படத்தின் அச்சாணி என்றால் முனியாண்டியாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ்தான். அவரது பாத்திர அமைப்பை இன்னும் ஸ்திரப்படுத்தியிருந்தால், தானாக விருமன...