யாதும் ஊரே யாவரும் கேளிர் விமர்சனம்
'உலகிலுள்ள எல்லா ஊரும் நமது ஊரே; வையத்திலுள்ள அனைத்து மக்களும் நம் உறவினரே!' என்ற ஒப்பற்ற தத்துவத்தை 2000 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்தியம்பிய கணியன் பூங்குன்றனாரின் மிகப் பிரபலமான புறநானூற்றுச் செய்யுளின் முதல் வரியைத் தலைப்பாக்கி, பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தனர் படக்குழு.
இலங்கையில் இருந்தால் சில்லுகளின் (குண்டுகள்) வெடிப்பால் எந்நேரமும் இறக்கலாம் என அஞ்சி நடிகர் ராஜேஷ் சிறுவனாக இருக்கும் விஜய்சேதுபதியை லண்டன் அனுப்புகிறார். செல்லும் வழியில் சோதனைச் சாவடியில் அகப்படுகிறான் சிறுவன். அந்தச் சிறுவன், விஜய் சேதுபதியாக வளர்ந்து கொடைக்கானலில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு வருகிறார். அந்த தேவாலயத்துக்கு வரும் மேகா ஆகாஷோடு காதல் கொள்கிறார். தனது அடையாளத்தை மறைக்கிறார். இன்னொரு புறம் மகிழ் திருமேனி விஜய்சேதுபதியைக் கொல்ல வேண்டும் என அலைகிறார். இப்படி அலைபாயும் கதையின் இலக்கு என்ன என்பதை...