யூகி விமர்சனம்
ஒரு மிஸ்ஸிங் கேஸை அடிப்படையாக வைத்து, அதோடு சிற்சில எமோஷ்னல் விசயங்களையும் தூவிப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
படத்தின் துவக்கத்திலே கயல் ஆனந்தி காணமால் போனதிற்கான விசாரணை துவங்குகிறது. அடுத்த காட்சி ஜான்விஜய் கொலை செய்யப்படுகிறார். இவை சம்பந்தமான விசாரணைகளும் விபரிப்புகளும் நடைபெறுகின்றன. ஒரு பக்கம் மாலை போட்ட கெட்டப்போடு நட்டி விசாரணைகளை நடத்துகிறார். மறுபுறம் டிடெக்டிவான நரேன், கதிரோடு இணைந்து விசாரிக்கிறார். இந்த மூன்று விசாரணைகளின் பின்னணியிலும் ஒரே விசயம் தான் பின்னப்பட்டிருக்கிறது. மேலும் இவர்கள் மூவரில் ஒருவரே இதைச் செய்திருக்கிறார் என்பதும் தெரிய வருகிறது. அது யார் என்பதே படத்தின் திரைக்கதையாக விரிகிறது
டிடெக்டிவ் ஆபிசராக நரேன் பொருத்தமான உடல்மொழியை வெளிப்படுத்தி அந்தக் கேரக்டருக்கு நியாயம் சேர்த்துள்ளார். நட்டி நடிப்பில் இயல்புத்தன்மை மிஸ்ஸிங். ஒருவேளை அவரது கேரக்டரின் வடி...