Shadow

டேக் டைவர்ஷன் விமர்சனம்

ஒரு 90’ஸ் கிட் தன் திருமணத்திற்காக பாண்டிச்சேரி செல்கிறார். செல்லும் வழியில் தன் அலுவலக மேலதிகாரி சொல்லும் ஒரு பணியை முடிக்க வேண்டிய நிர்பந்தம் அவருக்கு வருகிறது. அந்தப் பணியில் ஒரு பெரும் பிரச்சனை இருக்க, எப்படி பிரச்சனைகளை ஹீரோ டீல் செய்தார் என்பதை, பல டேக் டைவர்ஷன் போட்டுச் சொல்லியிருக்கிறது இப்படம்..

ஹீரோ அடர்ந்த தாடி, மெலிதான பாடி என பாவப்பட்ட 90’ஸ் கிட்ஸ் கதாபாத்திரத்திற்குப் பக்காவாகப் பொருந்துகிறார். இரு நாயகிகளும் ஒரு சில இடங்களைத் தவிர ஈர்க்கவே செய்கிறார்கள். ஒரு 2K கிட்ஸின் அட்ராசிட்டி படத்தை ஆங்காங்கே ரசிக்க வைக்கிறது.

டெக்னிக்கல்லி மிகவும் அயர்ச்சி ஏற்படுத்துகிறது படம். ஜோஸ் ப்ராங்க்ளின் பின்னணி இசை, பாடல்கள் இரண்டிற்கும் பெரிதாக மெனக்கெடவில்லை. ஒளிப்பதிவில் பெரிய நேர்த்தியில்லை. டப்பிங்கில் துளியும் கவனம் எடுக்கவில்லை போல. லிப்சிங்கில் அவ்வளவு பிரச்சனைகள்.

படமெங்கும் ஆர்வம் தொனிக்கும் வசனங்களும் மேக்கிங்கும் தான் இருக்கிறது. எதுவுமே ஆற்றலாக வெளிப்படவில்லை. ஒன்லைனாக கேட்பதற்கு இன்ட்ரஸ்டிங்காக இருக்கும் கதையைப் பார்ப்பதற்கும் அப்படி மாற்றியிருக்கலாம்.

– ஜெகன் கவிராஜ்