32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“ரைட்டர்: தமிழ் சினிமா வளமானதாக மாறுகிறது” – பாரதிராஜா

Dinesh R சேலம் Published: 23/12/2021 1 நிமிட வாசிப்பு Updated: 25/01/2022 சினிமா
எழுத்து அளவு:

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரைட்டர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நேற்று இயக்குநர்கள் பாரதிராஜாவும் பாக்கியராஜும், ரைட்டர் படம் பார்த்த பிறகு இயக்குநர் பிராங்ளினை வெகுவாகப் பாராட்டினார்.

“தமிழ் சினிமாவில், ஒரு போலீஸ் கதை புதுமையாக இருக்கிறது. எனக்குப் ரொம்பப் பெருமையாக இருக்கிறது. இளைய தலைமுறையினரிடமிருந்து இப்படிப்பட்ட படங்கள் வருவதைப் பார்க்கும் பொழுது தமிழ் சினிமா இன்னும் வளமானதாக மாறுகிறது.

எப்போதும் அதிகமாக பேசி நடிக்கும் சமுத்திரக்கனி இந்தப் படத்தில் அதிகம் பேசாமல் மிக அழகாக நடித்திருக்கிறார். நான் ரசித்தேன்.

இயக்குநர் பா.இரஞ்சித் தரமான படங்கள் தயாரிப்பதன் மூலம் நல்ல இயக்குநர்களை இந்தத் தமிழ் சினிமாவுக்கு தந்து கொண்டிருக்கிறார். அவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் அன்புகளும்” என்றார்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.